

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளும் பிற அரசுத் துறைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.7,351 கோடி மின் கட்டணப் பாக்கி வைத்துள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மின்சார வாரியத்துக்கு அரசுத் துறைகளும் சுமையை ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. ஓர் உள்ளாட்சி அமைப்பு தன் மக்களுக்குக் குடிநீர், பொதுக் கழிப்பறை, தெருவிளக்குகள் எனப் பல சேவைகளை அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் மொத்தம் 5.68 லட்சம் மின் இணைப்புகளைக் கொண்டுள்ளன.