Published : 27 Jun 2023 06:25 AM
Last Updated : 27 Jun 2023 06:25 AM

ப்ரீமியம்
வலுப்பெறும் இந்திய - அமெரிக்க உறவு

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசு முறைப் பயணம், சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டுகளில், இந்திய-அமெரிக்க உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய பயணங்களைப் போலல்லாமல், அமெரிக்க அரசின் அழைப்பில் மோடி மேற்கொண்ட முதல் பயணம் இது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ‘அமெரிக்காவின் நெருக்கமான நண்பனாக இந்தியா மாறிவருகிறது’ என பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘தி எகானமிஸ்ட்’ இதழ் சொல்வதன் சான்றாக இந்தப் பயணம் அமைந்தது. உக்ரைன் போர், பொருளாதார நெருக்கடி போன்ற சமீபத்திய சர்வதேசப் பிரச்சினைகளுக்கான தீர்வாக இந்தச் சந்திப்பு பல ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x