புனைவுக்குள் சுழலும் உலகு | சிற்றிதழ் அறிமுகம்

புனைவுக்குள் சுழலும் உலகு | சிற்றிதழ் அறிமுகம்
Updated on: 
1 min read

2026ஆம் ஆண்​டின் மூன்​றாவது பரு​வத்​துக்​கான (ஜூலை, ஆகஸ்ட், செப்​டம்​பர்) மணல்​வீடு இதழ் வெளியாகி​யுள்​ளது.

கட்​டுரைகள் உட்​பட பெரு​மளவிலும் புனைவுலகுக்கு முக்​கியத்​து​வம் அளிக்​கப்​பட்​டிருக்​கிறது. பெண்​களின் உளவியலை மையப்​படுத்​திய நான்கு சிறுகதைகள் இடம்​பெற்​றுள்​ளன.

ஆசை, உழைப்பு, சாதி என சமூகமும் குடும்​பமும் பெண்​கள் மீது சுமத்​தும் பாரங்​களை சாரோன், முத்து ஜெயா, வினையன், மந்​தி​ரி​குமார் ஆகியோரின் கதைகள் அம்​பலப்​படுத்து​கின்​றன.

கிழக்கு ஐரோப்​பியக் கவிஞர் யான் காப்​லின்ஸ்கி பற்​றிய கட்​டுரையோடு, அவரது கவிதைகள் சில​வற்​றின் மொழி​யாக்​கத்​தையும் தந்​திருக்​கிறார் பிரம்​ம​ராஜன்.

சமகாலச் சிறுகதைகள், கவிதைகள் குறித்த விரிவான விமர்​சனத்​தையும், புகழ்​பெற்ற நாவல்​கள் குறித்த புதிய பார்​வையையும் முறையே ஞா.தியாக​ராஜன், பெரு.விஷ்ணு குமார், மிஹாத், கமலாலயன் ஆகியோர் எழுதி​யிருக்​கின்​றனர்.

இயக்​குநர் ஆந்த்​ரேய் தார்க்​கோவ்​ஸ்கி எழுதிய கட்​டுரையின் AI மொழிபெயர்ப்​பைச் செம்​மைப்​ படுத்​தி​யிருக்​கிறார் ஜீ.முருகன். சூரஜ், நுட்ப வினைஞன், வன்மி, சைத்​ரீகன், விவேகானந்த் செல்​வ​ராஜ் ஆகியோரின் கவிதைகள் இவ்​விதழில் இடம்​பெற்​றுள்ளன.

மணல்வீடு

(காலாண்​டிதழ்)

ஆசி​ரியர்: மு.ஹரி​கிருஷ்​ணன்

Kalari Heritage and Charitable Trust

விலை: ரூ.200

தொடர்​புக்கு: 9894605371

புனைவுக்குள் சுழலும் உலகு | சிற்றிதழ் அறிமுகம்
முக்கியமான தீர்ப்புகள்
Loading content, please wait...

X