இந்தியக் காலநிலை ஆராய்ச்சி இனிமேலாவது மேம்படுமா?

அறிவியலாளர்கள் உருவாக்கிய அறிக்கை அரசின் கவனத்தைப் பெற வேண்டும்
இந்தியக் காலநிலை ஆராய்ச்சி இனிமேலாவது மேம்படுமா?
Updated on
3 min read

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் முன்னெடுப்பாக வானியல், அணு இயற்பியல், காலநிலை ஆராய்ச்சி உள்ளிட்ட ஆறு துறைகளில் 2020-2035 காலக்கட்டத்தில் ஏற்பட வேண்டிய முன்னேற்றங்கள் குறித்த விரிவான அறிக்கைகள் (Mega Science Vision Reports) தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் காலநிலை ஆராய்ச்சி குறித்த ஆய்வை மேற்கொள்ள, இந்திய அறிவியல் நிறுவனத்தை முதன்மையான ஒருங்கிணைப்பு அமைப்பாக மத்திய அரசு தேர்ந்தெடுத்தது.

பேராசிரியர் எஸ்.கே.சதீஷின் தலைமையில் அறிவியலாளர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களிடம் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டு ஒரு விரிவான அறிக்கையைத் தயாரித்திருக்கிறது.

போதாமைகள்

காலநிலை மாற்றம் என்பது காலநிலை நெருக்கடிநிலையாக வலுப்பெற்று, சமகாலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இந்தப் பின்னணியில், காலநிலை மாற்றம் தொடர்பான எல்லாத் துறைகளிலும் எப்படிப்பட்ட ஆய்வுகள், திட்டங்கள், முன்னெடுப்புகள் தேவை என்று இந்த அறிக்கை விரிவாகப் பேசுகிறது.

இந்தியாவின் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் சேர்ந்து, எதிர்காலக் காலநிலை ஆராய்ச்சிக்காகத் தயாரித்திருக்கும் செயல்திட்டமாக, வரைபடமாக இதைப் பார்க்கலாம். குறிப்பாக, தற்போது நிகழ்ந்துவரும் காலநிலை சார்ந்த ஆய்வுகளிலும் முன்னெடுப்புகளிலும் உள்ள போதாமைகளையும் உள்கட்டமைப்புப் பிரச்சினைகளையும் ஆய்வுக் குழு விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

காலநிலை சார்ந்த ஆய்வுகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் கருவிகளின் போதாமையையும் ஒரு மிகப்பெரிய தடைக்கல்லாக ஆய்வுக் குழு குறிப்பிடுகிறது. அறிவியலாளர்களுக்கும் தொழில் துறைக்கும் நடுவே போதுமான அளவு ஒருங்கிணைப்பு இல்லை என்பதால், காலநிலை மாற்றம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்குத் தேவையான அதிநவீன, துல்லியத் தரவுகளைத் தருகிற தரமான கருவிகள் எதுவும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

இறக்குமதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படும் கருவிகளும்கூட அளவுத்திருத்தம் (Calibration) செய்யப்படுவதில்லை என்று ஆய்வுக் குழு சுட்டிக்காட்டுகிறது. கறுப்பு கார்பன், மண் ஈரப்பதம் போன்ற பல அம்சங்களுக்கான துல்லியமான தரவுகளை நமது செயற்கைக்கோள்கள் தருவதில்லை என்றும் குழு சொல்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in