ஏன் தாமதமாகிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல்?

சாதாரண மக்கள் தேர்தலில் நின்று பிரதிநிதிகளாகும் வாய்ப்புள்ள ஒரே இடம் ஊரக உள்ளாட்சிகள்தான்
ஏன் தாமதமாகிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல்?
Updated on: 
3 min read

தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிந்து 22 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே மீதம் உள்ள ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளின் பதவிக் காலமும் கடந்த அக்டோபர் 19ஆம் தேதியோடு முடிவடைந்தது.

இதையொட்டி அனைத்து மாவட்ட ஊரக உள்ளாட்சிகளிலும் சிறப்பு அலுவலர்களின் காலம் மேலும் ஆறு மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்னும் ஆறு மாத காலத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது அரசு. இது சரியான நகர்வா?

அரசின் விளக்கம்

தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,525 கிராம ஊராட்சிகள் இருந்தன. தற்போது, புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும், 93 கிராம ஊராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கிராம ஊராட்சி ஏற்கெனவே உள்ள ஊராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 23 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் மாறுவதால், இங்கு முறையான தொகுதி மறுவரையறையும் இடஒதுக்கீடும் செய்ய வேண்டியுள்ளது.

இதையெல்லாம் முடிக்காமல் தேர்தல் நடத்துவது இயலாது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 2024இல் தொடுக்கப்பட்ட வழக்கின் (Writ Petition No.39526/2024) தீர்ப்பின்படி தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு செயல்பாடுகள் முடிக்கப்பட்ட பிறகுதான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இதனால், மேற்கூறப்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் 2027 ஏப்ரல் 19 வரையும், புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவி ஏற்கும் வரையும் அல்லது அடுத்த ஆறு மாத காலத்துக்குச் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் மூலம் நிர்வாகம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை தெரிவித்திருக்கிறது.

தாமதத்தின் விளைவுகள்

அதாவது, கடந்த ஆட்சியில் சொல்லப்பட்ட அதே தீர்ப்பையும் காரணங்களையும் கூறித்தான், தற்போதைய அரசும் ஊரக உள்ளாட்சித் தேர்

தலைத் தள்ளிப்போட்டுள்ளது. அரசின் விளக்கப்படி பார்த்தாலும், 23 மாவட்டங்களில்தான் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது எனில், மீத

முள்ள 14 மாவட்டங்களுக்குத் தேர்தலை நடத்த எந்தத் தடையும் இல்லை. இருந்தும் ஒட்டுமொத்தமாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை அரசு நடத்தாமல் உள்ளது.

Loading content, please wait...

X