பேரவைத் தேர்தல் 2026: இந்திய ஜனநாயகத்தின் சக்திவாய்ந்த எண் எது?

தேர்தல் வெற்றி - தோல்விகளையும் மக்களாட்சியின் வலிமையையும் தீர்மானிப்பவை எண்கள்
பேரவைத் தேர்தல் 2026: இந்திய ஜனநாயகத்தின் சக்திவாய்ந்த எண் எது?
Updated on
2 min read

நான் என் மகளோடு அரசியல் பேசினேன். தேர்தல் காலம் அல்லவா! அவளுக்குத் தெரிந்த அரசியலை என்னிடம் பேசினாள். பேச்சினூடே தமிழ் இலக்கணத்தில் ஒரு சந்தேகம் கேட்டாள்.

அவளுக்குக் கொடுத்த விளக்கத்தில், “தமிழில் உள்ள 234 எழுத்துகளில்...” என்று சொல்லிவிட்டேன். மகள் என் தவற்றைச் சுட்டிக்காட்டினாள். 234 அல்ல, 247. தமிழகச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையான 234தான் அனைவரின் மனதிலும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தை வாழ்வித்துக்கொண்டிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டம். ஜனநாயகத்தின் ரத்த ஓட்டமாக இருப்பவை எண்கள். சில நாள்களுக்கு முன்னர், ஜனநாயகத்தில் எண்கள் செய்யும் மாயாஜாலத்தை எனது மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்பினேன்.

2342026 இந்த எண்ணைக் கரும்பலகையில் எழுதி, ‘இந்த எண் குறித்து யோசித்து வாருங்கள். யாரிடமேனும் கேட்டும் வரலாம்’ என்று சொல்லி அனுப்பினேன். மறுநாள் மாணவர்கள் ஆளுக்கொரு பதிலைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

வியப்பளித்த பதில்கள்

ஒரு மாணவன், “தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறும் தேதி” என்றான். இன்னொரு மாணவன், “தமிழகச் சட்டப்பேரவையில் 234 தொகுதிகள் உள்ளன” என்றான். “இந்த எண்ணை 2,3,4,2,2,6 என்று பிரித்துக் கூட்டினால் 19 இது ஒரு பகா எண்.

இதையே 23,4,20,26 என்று கூட்டினால் 73 பகா எண். மேலும் இதைத் தேதி, மாதம், ஆண்டு எண்களைப் பிரித்துக் கூட்டினால் 2053 வருகிறது. இதுவும் பகா எண்” - என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு பதில் இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in