புதிய அரசு செய்ய வேண்டியவை என்னென்ன?

பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அதிகம்
புதிய அரசு செய்ய வேண்டியவை என்னென்ன?
Updated on
3 min read

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்னும் பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. தேசிய வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு 10% என்பது ஒரு சாதனை. ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் எவ்வாறு நிகழ வேண்டுமோ, அதற்கு ஏற்றவாறு பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை மூன்று விழுக்காடு என்கிற கட்டுக்குள் நிற்கிறது. கல்வி, சுகாதாரம், மனித வளக் குறியீடு போன்ற துறைகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தத் தருணத்தில் புதிய அரசு மலர்ந்துள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லப் புதிய அரசு பல சவால்களை எதிர்கொள்ள இருக்கிறது.

வேளாண்மை

மாநில உற்பத்தி மதிப்பில் 13% வேளாண்மைத் துறையின் பங்களிப்பு. நான்கில் ஒரு பங்கு மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்ந்துவருகின்றனர். முந்தைய அரசு வேளாண்மைக்கு என்று தனி வரவு செலவுத் திட்டம் கொண்டுவந்தது முக்கிய நகர்வு. எனினும் அதில் விவசாயம் பற்றிப் பேசப்பட்ட அளவுக்கு விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பேசப்படவில்லை.

93% பேர் சிறு, குறு விவசாயிகள் என்னும் நிலையில் நிலம் மேலும் மேலும் துண்டாடப்பட்டு வருவதும், சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலைக்குரியவை.

நிலத்தின் மதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து, ‘நிலத்தை விற்றால் லாபம்; சாகுபடி செய்தால் நஷ்டம்’ என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். வேளாண்மை வருமானம் குறைந்திருக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் தேசிய சராசரியைவிடக் குறைந்துள்ளது. இத்துடன் காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் வேளாண்மைக்குச் சவாலாகி இருக்கின்றன.

தொழில் வளர்ச்சி

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் சிறு, குறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிறந்த பங்கை ஆற்றிவந்தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பெருமளவில் இருக்கிறது.

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிலைமை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை என்பதற்கு, சாம்சங் தொழிலாளர் போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in