சதுப்புநிலத்தை அழித்து நீர்த்தேக்கம் தேவையா?

சதுப்புநிலத்தை அழித்து நீர்த்தேக்கம் தேவையா?
Updated on
2 min read

சென்னைக்குத் தெற்கே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் கேளம்பாக்கத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையில் நெம்மேலிச் சதுப்புநிலம் அமைந்துள்ளது. பழைய ஆவணங்களில் Great salt lake எனக் குறிப்பிடப்படும் இந்தச் சதுப்புநிலத்தை மாற்றுவதற்கான திட்டத்தை

மாமல்லன் நீர்த்தேக்கம் என்கிற பெயரில் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இது சூழலியல் சார்ந்த பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

தனித்துவ சூழலியல் தொகுதி: 5,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ள இந்த நிலப்​பகுதி நன்னீரும் கடல்நீரும் இணையும் ஒரு தனித்துவமான சூழலியல் தொகுதி. இந்தச் சதுப்பு​நிலத்தின் வடக்குப் பகுதியில் கோவளம் அருகே முட்டுக்காடு கழிமுக​மும், தெற்குப் பகுதியில் மாமல்​லபுரம்​-கல்​பாக்கம் இடையே கோகிலமேடு கழிமுகமும் அமைந்துள்ளன. நெம்மேலி சதுப்புநில நீர்ப்​பிடிப்புப் பகுதியில் சுமார் 69 சங்கிலித் தொடர் ஏரிகள் உள்பட 121 நீர்நிலைகள் உள்ளன.

இதில் மனமத்தி ஏரி, சிறுதாவூர் ஏரி, ஆமூர் ஏரி, தண்டலம் ஏரி, பையனூர் ஏரி, கொண்டங்கி ஏரி, ஒரகடம் ஏரி ஆகியவை முக்கிய​மானவை. இள்ளலூர், மடையத்​தூர், ஆலந்தூர், தண்டலம் காட்டூர், சிறுகுன்றம், அஞ்சூர், வல்லம், ஒரகடம், திருக்​கழுக்​குன்றம் உள்ளிட்ட 20 காப்புக்​காடுகள் இதன் நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் அமைந்துள்ளன.

மேற்குப் பகுதியில் உள்ள நீர்ப்​பிடிப்புப் பகுதி​களி​லிருந்து வரும் நீரானது, நெம்மேலிப் பகுதியை அடையும்போது கடற்கரையோரம் நீண்டுள்ள மணல்மேடுகளால் தடுக்​கப்​படு​கிறது. இவ்வாறு பல ஆண்டுகளாக நீர் தேங்கு​வதால் இப்பகுதி ஒரு பரந்த சதுப்பு​நிலமாக உருமாறி உள்ளது. கடல் அலைகள் உயரும் கழி ஓதம் (High Tide) ஏற்படும்​போது, உப்பு நீர் உள்ளே புகுந்து இதை உவர் நிலமாக (Brackish wetland) மாற்றுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in