தொகுதி மறுவரையறை சொல்லும் சேதி என்ன?

இந்தப் பிரச்சினையில் தொகுதி மறுவரையறை ஆணையம் என்ன செய்யப் போகிறது?
தொகுதி மறுவரையறை சொல்லும் சேதி என்ன?
Updated on: 
3 min read

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில், தவெக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்குப் பிறகு அது குறித்த விவாதம் பொதுவெளியில் தொடர்கிறது.

பின்னணி என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 81இன்படி, கடைசியாகக் கணக்கெடுத்து வெளியிடப்படும் மக்கள்தொகையின் அடிப்படையில், மக்கள்

தொகைக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரப்படி மக்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இது 1952 பொதுத் தேர்தலில் இருந்து 1971 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதிகரித்துவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அப்போதைய மத்திய அரசு நாடு தழுவிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்து, அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தியது.

அதன் விளைவு, சட்டக்கூறு 81 விதிமுறைப்படி கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1971 தேர்தலின்போது தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் 41இலிருந்து 39 ஆகக் குறைந்தது. அதுபோலத் தென் மாநிலங்களில் சில பாதிக்கப்பட்டன.

அதன் பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வைத்து இடங்களை நிர்ணயிக்கக் கூடாது என்று எழுந்த எதிர்ப்பின் காரணமாக, முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும் வாஜ்பாயும் முறையே 1976, 2001ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தற்காலிகமாக 25 ஆண்டுகள் நிறுத்திவைத்தனர். அது இன்றுவரை தொடர்கிறது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது பல்வேறு காரணங்களால் தடைபட்டிருந்தாலும், தற்போதைய மத்திய அரசு காலக்கெடுவின்படி 2026க்குப் பிறகு கணக்கெடுப்பை நடத்துவது என்று முடிவெடுத்து, அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in