நாய்க்கடித் தடுப்பூசியில் என்ன பிரச்சினை?

நாய்க்கடித் தடுப்பூசியில் என்ன பிரச்சினை?
Updated on
3 min read

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் நாய்க்கடித் தடுப்பூசி தொடர்பாக அண்மையில் ஆஸ்திரேலியாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் ஓர் அதிர்ச்சித் தகவல் வந்தது. அதாவது, 2023 நவம்பர் முதல் தேதியிலிருந்து ‘அபய்ரேப்’ (Abhayrab) என்னும் வணிகப் பெயரில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட நாய்க்கடித் தடுப்பூசி போலியானது என்று ஆஸ்திரேலியத் தடுப்பூசித் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Australian technical advisory group on immunisation) மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அதேநேரத்தில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையமும் (Centre for Disease Control - CDC) இதேபோன்று ஓர் எச்சரிக்கை விளம்பரம் கொடுத்தது. இன்றுவரை உலகில் வெறிநோய் (Rabies) காணப்படாத நாடுகளில் ஆஸ்திரேலியா முக்கியமானது. சமீபத்தில், அந்த நாட்டுக்கு இந்தியாவிலிருந்து வந்த பயணிகளில் பலருக்கும் வெறிநாய்க்கடி அறிகுறிகள் தென்பட்டதால், அந்த நாட்டின் சுகாதாரத் துறை இந்தியப் பயணிகளை விசாரித்தது.

அப்போது கிடைத்த தகவலின்படி, ‘அபய்ரேப்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கே அம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்ட விஷயம் உறுதியானது. அதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருகிறவர்கள் 2023, நவம்பர் முதல் தேதிக்குப் பிறகு ‘அபய்ரேப்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தால், அவர்கள் மறுபடியும் அரசு அங்கீகரித்த வேறு ஒரு நிறுவனத்தின் நாய்க்கடித் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று 2025 நவம்பர் 25இல் அறிவித்தது.

எங்கே, என்ன பிரச்சினை? - ‘அபய்​ரேப்’ தடுப்​பூசியைத் தயாரித்த ‘இந்தியன் இம்யுனோலாஜிக்​கல்ஸ் லிமிடெட்’ நிறுவனம், ‘அபய்​ரேப்’ தடுப்பூசி இந்தியாவில் போலியாகத் தயாரிக்​கப்​பட​வில்லை என்றும், அம்மா​திரியான தடுப்பூசி இப்போது இருப்​பிலும் இல்லை’ என்றும் டிசம்பர் 27இல் தெரிவித்தது.

மேலும், ‘அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு தடுப்​பூசித் தொகுப்பும் மத்திய மருந்துத் தரக்கட்டுப்​பாட்டு ஆய்வகம் (Central Drugs Control Laboratory) பரிசோ​தித்துத்தரச் சான்றிதழ் வழங்கிய பின்னரே விற்பனைக்கு அனுப்​பப்​படு​கிறது’ என்றும் அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் அறிவித்​துள்ளார்.

அப்படி​யா​னால், எங்கேதான் பிரச்சினை? ஒரு தரமான தடுப்பூசி பயனாள​ருக்குப் பலன் தரவில்லை என்றால், அந்தத் தடுப்​பூசியைச் சரியான காலத்​தில்​/​முறையான தவணைகளில் அவர் செலுத்​திக்​கொள்​ளாமல் இருந்​திருக்​கலாம் அல்லது அந்தத் தடுப்​பூசியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்​திருக்​கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in