எது தலைமை? எது உடைமை? | திரை கடலோடி 1

மங்கோலியப் பாலைவனத்தில் சில தரிசனங்கள்
Updated on: 
2 min read

“இதே சாலையில்தான் இன்னும் ஏழெட்டு மணி நேரம் பயணம் செய்யப்போகிறோம். தயார்தானே?” என்று கேட்டார் முனைவர் அல். ஆனால், அந்த மங்கோலியப் பெண் அதிகாரியின் எச்சரிக்கை என்னை முழுமையாகத் தயார்படுத்தவில்லை என்பது எனக்குப் போகப் போகத்தான் புரிந்தது.

கனமான குளிர் அமைதி

இந்திய நிதியுதவியுடன் நடைபெறும் ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை மேற்பார்வையிட நான் மங்கோலியா சென்றிருந்தேன். ஆனால், உலகப் புகழ்பெற்ற கோபி குளிர்ப் பாலைவனத்தை (Gobi Snow Desert) கடக்க முற்றிலும் மாறுபட்ட ஒரு மன உறுதி தேவைப்பட்டது. அங்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள் என்பதுதான் காரணம்.

இந்தியாவின் பரப்பளவில் பாதி அளவு இருக்கும் மங்கோலியாவில் இந்திய மக்கள்தொகையில் ஒரு சதவீதம்கூட இல்லை. தலைநகர் உலான்பத்தூரைவிட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே, மயக்கம் தரக்கூடிய வெறுமையாக நிலப்பரப்பு விரிந்தது. மலையில் விழுந்த நூலாய்க் கிடந்த ஒற்றைத் தார்ச்சாலையில் நாங்கள் சென்ற மூன்று கார்கள் வரிசையாக வண்டுகளைப் போல விரைந்தன.

இது வாழ்நாள் வாய்ப்பு, தூங்கிவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அந்தப் பெருவெளியின் குளிர் அமைதி, கனமாக இருந்தது. பிறகு பிற உயிர்கள் தென்படத் தொடங்கின. சுதந்திரமாகத் திரியும் பல காட்டுக் குதிரைகள் சாலையைக் கடக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தோம்.

கொஞ்ச தூரத்தில், அடர்ந்து கறுத்த சடைமுடியுடன் பிரம்மாண்டமான குளிர்ப் பிரதேசக் காட்டுமாட்டைப் பார்த்தோம். ஒளிப்படம் எடுப்பதற்காக காரை நிறுத்தினோம். ஏதோ விசாரிக்க வருவதுபோல அருகே வந்தது.

அதை உற்றுப் பார்த்தபடி, “நீங்கள்தானே, மயிர் நீத்தால் உயிர் வாழாக் கவரிமா? நிஜமாகவே செத்துவிடுவீர்களா? உங்களை ஆள் மாறாட்டம் செய்து, மானாக்கி, ‘கவரிமான்’ என்று படமெல்லாம் எடுத்திருக்கிறோமே, தெரியுமா?” என்று தமிழில் கேட்டேன். கெடுவாய்ப்பாக, அந்த விலங்குக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in