குறையும் பருவமழை: நெருங்கும் ஆபத்துகள்

கடந்த 35 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே இத்தகைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது
குறையும் பருவமழை: நெருங்கும் ஆபத்துகள்
Updated on: 
3 min read

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட 15% குறைந்திருப்பது (செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி) பெரும் கவலை அளிக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிறைவடையும் நிலையை பருவமழை எட்டியுள்ளது. இந்நிலையில், 15% குறைவான மழைப் பொழிவு என்பது மிகவும் கடுமையானது. நாட்டின் முன்னணி விவசாய மாநிலங்கள் அனைத்தும் தேசியச் சராசரியைவிட மிக அதிக அளவில் மழை பற்றாக்குறையைச் சந்தித்திருக்கின்றன. இந்தச் சூழலில், இந்தியாவின் விவசாயத் துறையில் ஏற்படப்போகும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம்.

பருவமழை பற்றாக்குறையின் அளவு முதலில் பருவமழை பற்றாக்குறையின் அளவைப் புரிந்துகொள்வோம். வானிலை மையத்தின் தரவுகளின்படி, செப்டம்பர் 19 வரை தென்மேற்குப் பருவமழை மூலம் இந்தியாவுக்குக் கிடைத்த மொத்த மழையின் அளவு 699.6 மி.மீ. இது வழக்கமாகப் பெய்ய வேண்டிய 822 மி.மீ. மழையைவிடக் குறைவு. மேலும், நாட்டில் மொத்தம் உள்ள 734 மாவட்டங்களில், 48% மாவட்டங்கள் பற்றாக்குறையான மழையை (நீண்ட காலச் சராசரியைவிட 20%க்கும் குறைவாக) பெற்றுள்ளன.

நாட்டின் முக்கியப் பெரிய அணைகளின் நீர்ச் சேமிப்பையும் மழைக் குறைவு கடுமையாகப் பாதித்துள்ளது. மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) செப்டம்பர் 10இல் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் 178 முக்கிய அணைகளில் 30% மட்டுமே அவற்றின் கொள்ளளவில் 80%க்கும் அதிகமான நீரைக் கொண்டுள்ளன. இந்த முக்கிய அணைகளின் மொத்தக் கொள்ளளவான 184.762 பில்லியன் கன மீட்டரில் (BCM), தற்போது 131.169 கன மீட்டர் நீர் மட்டுமே உள்ளது. இது 20% குறைவு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in