ஆசைக்குரலும் அறிவுக்குரலும் | திரை கடலோடி - 2

வணிகத்தில் சட்டரீதியான செயல்களே விதைகள்
Updated on: 
2 min read

சீன மொழியில் ஹாங்காங் Xiang Kang எனப்படுகிறது. அதற்கு ‘வாசனைத் துறைமுகம்’ என்று பொருள். ஆனால், நவீன ஹாங்காங்கை நோக்கி உலகை ஈர்ப்பதோ பண வாசனைதான். நான் ஹாங்காங்கில் பணிபுரிந்தபோது, சீனா உடனான வர்த்தகத்தைவிட, ஹாங்காங்குடனான இந்தியாவின் வர்த்தகம் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

துணிச்சலின் ஆழம்

பன்னாட்டு வர்த்தகத்தில் புதியவரான பிரபாகர் இந்தியாவிலிருந்து என்னைத் தொடர்புகொண்டார். ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்துக்கு இனிப்புப் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அவருக்கு வந்திருந்தது. ஆனால், அந்த நிறுவனம் தன் நிபந்தனைகளின்படிதான் வியாபாரம் நடக்க வேண்டும் என்று கறாராகக் கூறியிருந்தது.

இதுகுறித்து உள்ளூர்த் தொழிலதிபர் கிஷோரிடம் கேட்டேன். “உங்கள் நண்பர் இதில் இறங்கக் கூடாது சார்... முழுகிவிடுவார். யானை ஆற்றைக் கடக்கிறது என்று ஆழம் பார்க்காமல் மாடும் இறங்கி நடக்கலாமா? ஒருவரின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் ஒரே ஒரு மிகப்பெரிய தவறு முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்” என்றார்.

அடுத்த நாள் இருவரையும் பேசவைத்தேன். பேச்சு உடனே முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், கிஷோர் ஆச்சரியப்படுத்தினார். பிரபாகரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லச்சொல்லி நிதானமாகக் கேட்டுக்கொண்டார். உரையாடல் இருபத்தைந்து நிமிடங்களுக்கு நீண்டது.

“பிரபாகர், நீங்களும் ஒரு வியாபாரிதான். எந்தக் கேள்வியும் கேட்காமல் பொருள்களை அனுப்பி வையுங்கள் என்று எப்போதாவது உங்கள் கூட்டாளிகளிடம் கேட்டிருக்கிறீர்களா?” என்றார் கிஷோர். பிரபாகர் தயங்கினார்.

இன்னும் சில கேள்விகள். பிறகு, “ஒருவேளை இந்த வாய்ப்பில் சிக்கல் வந்து பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால், அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்கள் வணிகம் வலுவாக இருக்கிறதா?” என்று கேட்டார். அமைதியே பதில். மெல்ல மெல்ல பிரபாகரின் பதில்கள் தியானத்தன்மையை அடைந்தன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in