பேயவள் காண் எங்கள் அன்னை | உயிருக்கு நேர் 22

கடல் ஓரத்தில் தனிமைத் தவம் செய்யும் தாய்த் தெய்வம், தமிழ் மரபுக்கும் புதிதில்லை
Updated on
2 min read

அமைதிப் பெருங்கடலாகிய பசிபிக்கில், 1793இல் துரோபிரியாண்டு என்றொரு பிரஞ்சுக் கடலோடி நிலம் தேடித் தவித்தபோது, ஒரு தீவுக்கூட்டம் தட்டுப்பட்டது; கரைசேர்ந்து, இளைப்பாறிப் புத்துயிர் பெற்றான்.

அந்தத் தீவுக்கூட்டம் பெயரற்று மொட்டையாக நிற்பதாகக் கருதிய அவன், அங்கிருந்து கிளம்பிப்போகும்போது, முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல்போலத் தன் பெயரையே அந்தத் தீவுக்கூட்டத்துக்குக் கொடுத்துவிட்டுப் போனான்.

அடடா, ஓ அடடா! சிறியதும் பெரியதுமாக இருபத்தெட்டுத் தீவுகள் அடங்கிய அந்தத் தீவுக்கூட்டத்தில் வாழ்ந்த மக்கள், தாங்கள் பேசிய கிளிவிளை மொழியில் தங்களது தீவுகளுக்கு ‘கிரிவினை’, ‘வாகடை’, ‘கிடவை’, ‘கையிலூனை’ என்றெல்லாம் பெயர் வைத்திருந்தார்கள்.

பலவாக இருப்பவற்றை ஒற்றையாக்கி, அதற்கு ஒரு தனிப்பெயர் வைக்க வேண்டிய தேவையில்லை என்று அம்மக்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம். மேலாதிக்க மேட்டிமையன் ஒருவன் புகழ்க்கொடி நாட்ட விரும்பியதால், அவன் பெயர் அத்தீவுக்கூட்டத்தின் பெயர் ஆகிவிடுமா? கேட்பார் இல்லாவிட்டால் கேப்பையிலும் நெய் வடியலாம்.

தீவுப் புதல்வர்கள்

தமிழ்ப் பயல்களும்தான் மேலைக்கடல் தீவுக்கூட்டங்களுக்குப் படையோடு போய்க் கைப்பற்றினார்கள்; பெயர் தெரியாமல் திகைத்தார்கள்; எண்ண முடியாதபடி ஏராளத் தீவுகள் இருந்ததால், ‘முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்’ என்றும், மாலைபோல் இருந்ததால், ‘மாலைத்தீவு’ என்றும் அடையாளப்படுத்தி அமைதியடைந்துவிட்டார்கள். போகட்டும்.

1915-18வாக்கில் துரோபிரியாண்டுத் தீவுக்கூட்டத்தில் மானுடவியல் ஆய்வு நடத்திய மாலினோசுக்கி, அதைப் பற்றிச் சில செய்திகள் சொல்கிறார். தங்களில் இறந்துபோனவர்கள் தூமைத்தீவில் வாழ்வதாக அத்தீவுக்கூட்டத்தினர் நம்பினார்களாம். இறந்தவர்கள் வாழ்வதா? இதென்ன முரண்? அறிவு முதிராத காலத்தில் எழுந்த நம்பிக்கையைப் பொறுத்துக்கொள்க.

தூமைத்தீவில் இறந்தும் வாழ்கிறவர்களுக்கு அவ்வாழ்வில் அலுப்புத் தட்டும்போது, அவர்கள் ஆன்மக் குழந்தைகளாகி மீண்டும் கருவில் புகுந்து உலக வாழ்வுக்குத் திரும்புவதாகவும் நம்புகிறார்கள். கரு உருவாக்கத்தின் உடல்இயங்கியல் என்ன என்று அம்மக்களுக்கு அந்நாளில் தெளிவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in