பரந்தூர் விமானநிலையம்: ஆய்வு சொல்லும் உண்மைகள்

பரந்தூர் விமானநிலையம்: ஆய்வு சொல்லும் உண்மைகள்
Updated on
2 min read

பரந்தூர் புதிய விமானநிலையத் திட்டம் குறித்து ஆதரவுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் தொடர்ந்து ஒலிப்பதைப் பார்த்துவருகிறோம். இந்நிலையில், இந்தத் திட்டம் பரிந்துரைக்கப்படும் இடத்துக்கான நீரியல் ஆய்வு தொடர்பாக அண்மையில் வெளியாகியிருக்கும் அறிக்கை, அறிவியல் அடிப்படையிலான பல முக்கியத் தரவுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.

கூவம் வடிநிலம் எங்கே? - ‘உவகை ஆய்வு அறக்கட்டளை’ வெளியிட்​டிருக்கும் இந்த அறிக்கை, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்​ப​தற்​காகப் பரிந்துரைக்​கப்​பட்​டுள்ள 5,379 ஏக்கர் பரப்பளவிலான இந்நிலத்தை நீரியல்​நோக்கில் விரிவாக மதிப்​பாய்வு செய்திருக்​கிறது.

குறிப்பாக, இத்திட்டம் குறித்துத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) வழங்கி​யுள்ள முன் சாத்தி​யக்கூறு அறிக்கை​யையும் (Pre-feasibility Report) அப்பகு​தியில் உள்ள பாலாறு, அடையாறு, கூவம் வடிநிலப் பகுதி​களுக்கான நீரியல் நிலைகளையும் ஆய்வு செய்திருக்​கிறது.

கடந்த ஏப்ரல் 2024இல் டிட்கோ வழங்கிய இந்த அறிக்கையின் அடிப்​படை​யில், இந்தத் திட்டத்​துக்கான பல முக்கிய ஒப்பு​தல்கள் வழங்கப்​பட்​டிருக்​கின்றன. ஆனால், இவ்விடத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகள்/ ஈரநிலங்கள் ஆகியவற்றைக் கருத்​தில்​கொள்​ளாமல், ‘இப்பகு​தியில் இயற்கையான, பாதுகாக்​கப்பட்ட ஈரநிலங்கள் ஏதும் இல்லை’ எனக் குறிப்​பிட்​டிருப்பதை உவகை ஆய்வு அறக்கட்டளையின் நீரியல் அறிக்கை மிகுந்த அதிர்ச்சியோடு பதிவுசெய்திருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in