கடல்மட்ட உயர்வு என்னும் அச்சுறுத்தல்

இது மனித இனத்துக்கான பொதுப் பிரச்சினை என்று ஐ.நா. பிரகடனம் அங்கீகரித்திருக்கிறது
கடல்மட்ட உயர்வு என்னும் அச்சுறுத்தல்
Updated on: 
3 min read

ஐக்கிய நாடுகள் அவையின் 81ஆவது பொதுச்சபைக் கூட்டம் நியூயார்க் நகரத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரகடனம் (Declaration) வெளியிடப்பட்டிருக்கிறது. ஐ.நா. அவையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளும் இதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றன.

சர்வதேச அளவில் கடல்மட்ட உயர்வைப் பற்றி வெளியிடப்பட்ட முதல் பிரகடனம் இது. 24 பத்திகள் கொண்ட இந்தப் பிரகடனத்தில் கடல் மட்ட உயர்வு எவ்வளவு மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதும் அது குறித்த பிற பரிந்துரைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் 77 கோடி பேர் கடலுக்கு மிக அருகில் வசிக்கிறார்கள். கடல்மட்ட உயர்வு தீவிரமடையும்போது இவர்கள்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். 1993 முதல் 2011 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 2.65 மில்லிமீட்டர் உயர்வு என்று இருந்த அளவு 2012 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 4.75 மில்லிமீட்டர் என்கிற அளவில் - கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.

கரிம உமிழ்வுகள் இப்போது இருக்கும் அளவிலேயே அதிகரித்தால் 2100ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய கடல்மட்டம் 1.01 மீட்டர் உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உமிழ்வுகள் அதிகமானாலோ பாதிப்பு தீவிரமடைந்தாலோ இது 2 மீட்டராகக்கூட மாறலாம் என்று அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்தியாவைப் பொறுத்தவரை கடல்மட்ட உயர்வு என்பது பிற நாடுகளைவிட முக்கியமான பிரச்சினை. ஏனென்றால், மற்ற பெருங்கடல்களுடன் ஒப்பிடும்போது இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்பமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, வங்காள விரிகுடா பகுதியில் உள்ள இந்தியக் கடற்கரைகளில் பாதிப்பு அதிகமாக இருப்பதை ஆராய்ச்சிகள் உறுதிசெய்திருக்கின்றன.

அகமதாபாத், சென்னை, அமராவதி, கொச்சின், காக்கிநாடா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என 2026இல் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை சொல்கிறது. சென்னையின் கடல்மட்டம் ஆண்டுக்கு 2.72 மில்லிமீட்டர் உயர்ந்துவருகிறது. 2026இல் சென்னையின் கடல்மட்ட உயர்வு பற்றிய ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரை ‘நேச்சர்’ இதழில் வெளியானது.

அதில் கடல்மட்ட உயர்வு மட்டுமல்லாது, தரையமிழ்வு (Subsidence) பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் தாழ்ந்துகொண்டேபோகும் பகுதிகளில் கடல்மட்ட உயர்வு அதிகமாக உணரப்படும் என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

கடல்மட்ட உயர்வு, தரையமிழ்வு ஆகியவற்றால் சோழிங்கநல்லூர், சிட்லபாக்கம், அடையாறு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அந்தக் கட்டுரை எச்சரிக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in