​காலத்தின் சாட்சியமாய் திருப்பைஞ்ஞீலி கல்வெட்டு

​காலத்தின் சாட்சியமாய் திருப்பைஞ்ஞீலி கல்வெட்டு
Updated on
2 min read

திருச்சி மாவட்​டம், மண்​ணச்​சநல்​லூர் வட்​டத்​தி​லுள்ள திருப்​பைஞ்​ஞீலி நீலிவனேசுவரர் கோயில் குடைவரை​யும் கற்​றளி​யும் கொண்ட வரலாற்​றுச் சிறப்​புமிக்க ஒரு வளாக​மாகும். இக்​கோ​யிலுக்​கும் அப்​பகுதி மக்​களுக்​கு​மான ஒன்​பது நூற்​றாண்​டுக் கால வாழ்​வியல் பதிவு​கள் இங்​குள்ள 71 கல்​வெட்​டு​களில் ஆவணப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அவற்​றுள் ஒரு குறிப்​பிட்ட கல்​வெட்​டு, வரி செலுத்த முடியாமல் சிலர் ஊரை​விட்டு ஓடியதை​யும், அதனால் ஏற்​பட்ட வரிப் பற்​றாக்​குறையை ஈடு​கட்​டப் பொறுப்​பாளர்​கள் தங்​களின் நிலத்தை ஒற்றி வைத்த சுவாரசி​ய​மான வரலாற்​றை​யும் நமக்கு எடுத்​துரைக்​கிறது.

வரி​யால் உரு​வான நெருக்​கடி: கி.பி. 13ஆம் நூற்​றாண்​டின் தொடக்​கத்​தில், சோழ நாட்டை மூன்​றாம் இராஜ​ராஜர் ஆண்டு வந்​தார். இக்​காலத்​தில், திருப்​பைஞ்​ஞீலிக்கு அரு​கில் பிராமணக் குடி​யிருப்​பு​களோடு விளங்​கிய துடையூர் என்ற ஊரின் சபை உறுப்​பினர்​கள் அறு​வர் இக்​கல்​வெட்டு உரு​வாகக் காரண​மாக இருந்​துள்​ளனர்.

துடையூரிலிருந்து பிரிக்​கப்​பட்ட சிறு​சாத்​தமங்​கலம் என்ற சிற்​றூரில் இவ்​வ​மைப்​பினருக்​குச் சொந்​த​மான விளைநிலங்​கள் இருந்​தன. அக்​கால வரு​வாய்ப் பதிவேடு​களின்​படி, இந்​தச் சிறு​சாத்​தமங்​கலம் இறைவனுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்ட தேவ​தான நில​மாக, இறைவனின் பெயரிலேயே பதி​வாகி​யிருந்​தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in