கற்பிதங்கள் இன்னும் தொடர்கின்றன: போக்சோ விழிப்புணர்வுச் செயற்பாட்டாளர் வித்யா ரெட்டி

கருத்துப் பேழை சந்திப்பு
கற்பிதங்கள் இன்னும் தொடர்கின்றன: போக்சோ விழிப்புணர்வுச் செயற்பாட்டாளர் வித்யா ரெட்டி
Updated on: 
3 min read

குழந்தைகளுக்குப் பாலியல் கொடுமை இழைக்கப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்சோ (POCSO) சட்டத்தின் அடிப்படையில் வழிகாட்டியும் வருகிற அமைப்பு ‘துளிர்’.

சென்னை எழும்பூரைச் சேர்ந்த இந்த அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான வித்யா ரெட்டியிடம் பேசியதிலிருந்து...

Q

எந்தச் சூழலில் இந்தப் பணி தொடங்கியது?

A

குழந்தைகள் நலனுக்கான ஒரு தகவல் உதவி எண்ணில் தன்னார்வலராகப் பணிபுரிந்துவந்தேன். குழந்தைகளின் பாதுகாப்பு, தங்குமிடம் போன்ற பிரச்சினைகள் அங்கு பேசப்பட்டன. அவர்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் கவனம் பெறவில்லை.

சமூக விரோதிகள் குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் தள்ளுகின்ற குற்றம் பற்றிப் பேசப்பட்டது. ஆனால் அதேநேரம், சமூகரீதியாக நம்பிக்கையைப் பெற்ற இடங்களில் குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை ஒப்புக்கொள்வதில் மனத்தடை இருந்தது.

இந்த நிலைதான் அதற்கெனப் பிரத்யேகமாக ஓர் அமைப்பைத் தொடங்க வைத்தது. நானும் அலங்கார் சர்மா, விபின், நான்சி ஆகிய நண்பர்களும் சேர்ந்து 2004இல் ‘துளிர்’ அமைப்பைத் தொடங்கினோம். இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை நிறுவுவதற்காக ஓர் ஆய்வை மேற்கொண்டோம்.

2005இல் சென்னையில் தனியார், அரசுப் பள்ளிகளின் 11ஆம் வகுப்பு மாணவர்களிடையே அந்த ஆய்வு நடத்தப்பட்டது. எங்களிடம் பேசிய 2,211 குழந்தைகளில் 42% குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

2007இல் மத்தியப் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 13 மாநிலங்களில் 12,447 சிறாரிடையே மேற்கொண்ட ஆய்வும் இதை உறுதிப்படுத்தியது. 53% பேர் பலவந்தமான பாலியல் வன்முறை (penetrative sexual assault) அல்லது பாலியல் வன்முறைக்கு (assault) உள்ளானதாக அந்த ஆய்வில் கூறினர்.

Q

உங்கள் முயற்சிக்கு ஆதரவு எப்படி இருந்தது?

A

என் குடும்பத்தினர் என் பணியை ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் நிறுவனத்துக்கு ஊழியர் கிடைப்பதுதான் சிரமமாக இருந்தது. நேர்காணலுக்கு வந்த ஆண்கள் என்னிடம், ‘குழந்தை மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நான் வேலை செய்கிறேன் என்று வெளியே தெரிந்தால் திருமணத்துக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள்’ என்று சொன்னார்கள். பெண்களிடமும் இதே தயக்கம் இருந்தது. சமூகத்தில் இந்த அளவுக்குத்தான் புரிதல் இருந்தது.

Loading content, please wait...

X