விண்வெளியில் புவிசார் எல்லைகளுக்கு அர்த்தம் இல்லை! - சுபான்ஷு சுக்லா நேர்காணல்

விண்வெளியில் புவிசார் எல்லைகளுக்கு அர்த்தம் இல்லை! - சுபான்ஷு சுக்லா நேர்காணல்
Updated on: 
3 min read

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவர் சுபான்ஷு சுக்லா. இந்திய விமானப் படை விமானியான இவர், 2025இல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பியவர்.

அறிவியலைத் திறம்படப் பரப்பிவருவதுடன், தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் அறிவியல் தொடர்பான சுவாரசியமான, தெளிவான பதிவுகளை எழுதிவருகிறார். ‘தி செகண்ட் ஆர்பிட்’ என்னும் நூலை எழுதியிருக்கும் சுபான்ஷு சுக்லா, விண்வெளிப் பயணம் பற்றியும் தனது நூல் குறித்தும் பகிர்ந்துகொண்டவை:

Q

புத்தகம் எழுதலாம் என நீங்கள் முடிவுசெய்தது ஏன்?

A

இந்தப் பயணம் எனக்கானது மட்டுமல்ல, அனைவருக்குமானது என நம்புகிறேன். நான் ஓர் இருக்கையில் அமரவைக்கப்பட்டவனாக இருக்கலாம்; ஆனால், அந்த இருக்கையின் பின்னே இருக்கும் ஆர்வம் அனைவருக்கும் சொந்தமான ஒரு கதையின் அடிப்படையிலானது.

இரண்டாவதாக, இளம் வாசகர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்பினேன்: எந்த ஒரு மகத்தான பயணமும் சாதாரணமான ஓரிடத்திலிருந்துதான் தொடங்குகிறது. எனது பயணம் தொடங்கியது ஒரு வகுப்பறையில். அவர்களும் தங்கள் பயணத்தை அப்படித் தொடங்குவது சாத்தியம் எனச் சொல்ல விரும்பினேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in