சிற்றலை வானொலியும் சீனாவின் ஆதிக்கமும்

சர்வதேச வானொலி என்பது வெறும் செய்தி வழங்கும் ஊடகமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை
சிற்றலை வானொலியும் சீனாவின் ஆதிக்கமும்
Updated on: 
3 min read

உலகின் தொலைதூரப் பகுதிகளையும் இணைக்கும் ஒரு முக்கியத் தகவல் தொடர்பு ஊடகமாக விளங்குகிறது சிற்றலை வானொலி (shortwave radio).

இயற்கைப் பேரிடர்கள், இணையத் தடைகள், தொலைத்தொடர்பு வசதிகள் குறைவான பகுதிகள் போன்ற சூழ்நிலைகளில் சிற்றலை வானொலி தனது பயன்பாட்டுத் தேவையைத் தொடர்ந்து நிரூபித்துவருகிறது.

சிற்றலை வானொலி உலகில், சீன சர்வதேச வானொலி (China Radio International-CRI) பல வகையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி, சிற்றலை வானொலி உலகில் சிறந்து விளங்குகிறது. எனினும், இதில் சீனா செலுத்தும் ஆதிக்கம், இந்த வெற்றியின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது.

சீனாவின் அணுகுமுறை

சிற்றலை வானொலி மத்திய அலை அல்லது பண்பலை வானொலியைப் போல ஒரு நகரம் அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்துக்குள் மட்டும் ஒலிபரப்பப்படுவதில்லை.

வளிமண்டலத்தின் ‘அயனோஸ்பியர்’ எனப்படும் அயன மண்டலத்தின் மின்மயமாக்கப்பட்ட அடுக்குகளில் வானொலி அலைகள் பிரதிபலித்து, ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளையும் எளிதில் சென்றடைய முடியும்.

இதனால் சர்வதேச ஒலிபரப்புகளுக்குச் சிற்றலை ஒரு முக்கியமான ஊடகமாக இன்றளவும் இருந்துவருகிறது. இதை சீனா சாமர்த்தியமாகப் பயன்படுத்திவருகிறது.

சீன சர்வதேச வானொலி, சீனாவின் வெளிநாட்டு வானொலி ஒலிபரப்புச் சேவையாக 1941இல் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் ‘பீகிங் வானொலி (Radio Peking)’ என்கிற பெயரிலும் பின்னர் ‘பீஜிங் வானொலி (Radio Beijing)’ என்கிற பெயரிலும் அறியப்பட்ட இந்த வானொலி, உலக மக்களிடம் சீனாவைப் பற்றிய தகவல்களை எடுத்துச்செல்வதை நோக்கமாகக் கொண்டது.

வானொலி கேட்பவர்களின் தாய்மொழியிலேயே செய்திகளை வழங்கும்போது, அந்த நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், கல்வி, சுற்றுலா, வெளியுறவுக் கொள்கை குறித்த தகவல்கள் எளிதில் நேரடியாக மக்களைச் சென்றடையும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in