தேவதாசி முறை: மறுவாசிப்பும் மீள்பார்வையும்

தேவதாசிகள் குறித்து ‘புனிதமான கலைஞர்கள்’, ‘சுரண்டப்பட்ட பெண்கள்’ என இரண்டு விதமான சித்திரங்கள் முன்வைக்கப்படுகின்றன
தேவதாசி முறை: மறுவாசிப்பும் மீள்பார்வையும்
Updated on: 
3 min read

இந்திய வரலாற்றில் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய நமது புரிதல் பெரும்பாலும் குடும்பம், திருமணம், தாய்மை என்கிற மூன்று சமூக நிறுவனங்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரையறைகளுக்கு வெளியே வாழ்ந்த பெண்களின் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. அந்த வகையில் தேவதாசிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது; முரண்பாடுகள் நிறைந்தது.

கோயிலும் தேவதாசியும்

‘தேவதாசி’ என்கிற சொல் பொதுவாக ‘தெய்வத்தின் பணியாளர்கள்’ என்கிற பொருளைக் கொண்டது. குறிப்பிட்ட வரலாற்றுக் காலங்களிலும் பிராந்தியங்களிலும், பெண்கள் ஒரு கோயிலின் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அக்கோயிலின் சடங்கு - பண்பாட்டு நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்றனர். இசை, நடனம், விளக்கேற்றுதல், திருவிழா சார்ந்த சடங்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இடைக்காலக் கோயில் கல்வெட்டுகள், கோயில் என்கிற நிறுவனத்துடன் தொடர்புடைய பெண்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குகின்றன. அவர்கள் வெறும் சடங்கு நிகழ்த்துபவர்களாக மட்டும் இல்லாமல், கோயில் பொருளாதாரத்துடனும் நிலம், கொடை, ஊதியம் போன்ற வளங்களுடனும் தொடர்புடையவர்களாக இருந்ததை வரலாற்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் அரச/கோயில் ஆதரவின்கீழ் இசை, நடனப் பயிற்சி பெற்ற பெண்கள் உருவானார்கள். காலனியக் கால தஞ்சாவூரில் தேவதாசிகளின் நடன மரபு மராத்திய அரசர்களின் ஆதரவுடன் வளர்ந்ததாகப் பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தொழில்முறைக் கலைஞர்களாகவும் சிக்கலான அரசியல் / அழகியல் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவும் அவர்கள் இருந்தனர்.

அவர்களுக்குள் பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, கல்வி, சொத்துரிமை, அரச ஆதரவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன. காலப்போக்கில் சில தேவதாசிகள் அரசர்கள், நிலப்பிரபுக்கள், கோயில் அதிகாரிகள், செல்வந்தர்களின் ஆதரவைப் பெற்றனர்.

இந்த ஆதரவு சிலருக்குப் பொருளாதார வளத்தையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்கியிருக்கலாம். ஆனால், அதே உறவுகள் அதிகாரச் சமத்துவமின்மையையும் உருவாக்கின. இதனால், தேவதாசி மரபை ‘முழுமையான சுதந்திரம்’ என்றோ, ‘முழுமையான அடிமைத்தனம்’ என்றோ வரையறுப்பது வரலாற்றைச் சுருக்கிவிடும்.

காலனியப் பார்வையும் ஒழுக்கச் சீர்திருத்தமும்

19ஆம் நூற்றாண்டில் இந்தியச் சமூகத்தைப் பற்றிய காலனிய நிர்வாக - மறைப்பணியாளர் பார்வைகள் மாறத் தொடங்கின. இந்தியப் பெண்களின் பாலியல் வாழ்க்கை, திருமணம், குடும்பம், மதம் போன்றவை நாகரிகம், ஒழுக்கம் என்கிற மொழியின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தேவதாசிகளும் புதிய ஒழுக்கப் பிரிவுகளுக்குள் வைக்கப்பட்டனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in