இயற்கை அறிவியலுக்கு ஓர் உரைகல்

சங்க இலக்கியத்தின் இயற்கை அறிவியல் கூறுகளை வெகுமக்களிடம் பிரபலப்படுத்தியவர் பி.எல்.சாமி
இயற்கை அறிவியலுக்கு ஓர் உரைகல்
Updated on: 
3 min read

சங்க இலக்கியம் என்பது ஒரு பெரும் புதையல். தமிழின் அறிவுச் சுரங்கம். அதேநேரம், கால வேறுபாடு, மொழி அன்றைக்குக் கையாளப்பட்ட விதத்தால் சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்வது பாமரர்களுக்குச் சற்றுக் கடினமாக இருக்கலாம்.

இந்தப் பின்னணியில் சங்க காலத்தின் சமூகம், பண்பாடு, வரலாறு, அறிவியல் நிலைமைகள் குறித்து அறிவதற்கு எளிய நூல்கள், துறைசார் தொகுப்பு நூல்கள், ஆய்வு விளக்க நூல்கள் அதிகம் தேவைப்படுகின்றன. இந்த வகையில் அறிவியல், சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு எழுதிவந்தவர் பி.எல்.சாமி.

மு.வரதராசன் (பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை), தனிநாயகம் அடிகள் (Nature in the ancient poetry-1952, அதே நூலின் மற்றொரு வடிவமான Landscape and Poetry a Study of Nature in Classical Tamil Poetry-1997) போன்றோர் சங்க இலக்கியத்தில் இயற்கை குறித்துக் கோட்பாட்டுரீதியில் எழுதியிருக்கிறார்கள்.

இருந்தபோதும், சங்க இலக்கியத்தின் அருமைகளைப் பாமரர்களுக்கு உணர்த்தும் வகையில் இயற்கை அறிவியல் குறித்த நூல்களை பி.எல்.சாமி தொடர்ச்சியாக எழுதியுள்ளார். பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள், புல் வகை, செடி கொடிகள், மரங்கள் பற்றிய இவரது அறிவியல் ஆர்வம், சங்க இலக்கியத்துடன் தொடர்புபடுத்தி விளக்க வைத்தது.

இயற்கை தொடர்பான சங்க இலக்கியப் புலவர்களின் நுணுக்கமான அறிவை, அறிவியல் அணுகுமுறையுடன் இவர் வெளிக்கொணர்ந்தார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘அறிவியல் களஞ்சியம்’ முதல் தொகுதியின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 17 நூல்களை எழுதியுள்ளார்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுவந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் தன் ஆய்வுக் கட்டுரைகளையும், குறிப்பிட்ட தலைப்பில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பை அதே பதிப்பகத்தின் வழியாக நூலாகவும் வெளியிட்டுவந்துள்ளார்.

பிற்காலத்தில் வெள்ளையாம்பட்டு சுந்தரத்தின் சேகர் பதிப்பகம் இவருடைய நூல்களை வெளியிட்டது. ஆராய்ச்சி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இதழ், தமிழ்ப் பல்கலைக்கழக இதழ், இந்து (ஆங்கிலம்) உள்ளிட்ட இதழ்களில் எழுதியுள்ளார். உலகத் தமிழ் மாநாடுகள் பலவற்றில் ஆய்வுக் கட்டுரை வழங்கியுள்ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in