​நாகம்மாளுக்கு வயது 85

​நாகம்மாளுக்கு வயது 85
Updated on: 
2 min read

1930களில் வெளிவந்​து​கொண்​டிருந்த ‘மணிக்​கொடி’ இதழ் சிறுகதைகளுக்​குப் பெரும் இடம் அளித்​தது. பல எழுத்​தாளர்​கள் அவ்​விதழ் மூலம் அறி​முகம் பெற்​றனர். கொங்​குப் பகுதி கிராம வாழ்வை மையமிட்டு இளைஞர் ஒரு​வர் எழு​திய சில சிறுகதைகள் அவ்​விதழில் வெளி​யா​யின.

அவற்றை வாசித்த கு.ப.​ராஜகோ​பாலன், “கி​ராம வாழ்க்​கையை நன்​றாக அறிந்​திருக்​கிறீர்​கள். நாவல் எழுதலாமே” என்று அந்த இளைஞரைத் தூண்​டி​னார். அதை ஏற்று அவர் இரண்டே மாதத்​தில் நாவல் ஒன்றை எழுதி முடித்​தார். அப்​போது அவருக்கு இருபத்து நான்கு வயது.

அந்த இளைஞர் ஆர்​.ஷண்​முகசுந்​தரம் (1917 - 1977). 1942ஆம் ஆண்டு வெளி​யான அந்​நாவல் ‘நாகம்​மாள்’. வட்​டார இலக்​கிய வகைமை​யைத் தொடங்கி வைக்​கிறோம் என்​னும் உணர்வு ஏது​மின்றி இயல்​பாக அவர் எழு​திய நாவல் அது. அதற்கு முன் எத்​தகைய நிலப்​பரப்​பில் நடக்​கிறது என்​பதை அறிய முடி​யாத வகை​யில் பொது​மொழி கொண்டு எழு​திய நாவல்​களே வந்​திருந்​தன. அவற்​றில் உரை​யாடலில் மட்​டும் சாதாரண மக்​களின் பேச்​சுமொழிக்​குச் சிறிதளவு இடம் இருந்​தது.

அவை நல்​லது, கெட்​டது என்​னும் கறுப்பு வெள்​ளைச் சித்​திரம் கொண்​ட​வை. காடு​கரை, தோட்​டம் துர​வு, பயிர் பச்சை எல்​லாம் பரவிய தெளி​வான நிலச் சித்​திர​மும், ஒற்​றைத் தன்மை நீங்​கிய பாசாங்​கற்ற பாத்​திர உரு​வாக்​க​மும், உரை​யாடலில் மட்​டுமல்​லாமல் ஆசிரியர் கூற்​றி​லும் வட்​டாரக் கூறுகளைக் கொண்ட பேச்சு மொழி​யும் துலங்​கும் முதல் நாவலாக ‘நாகம்​மாள்’ விளங்​கியது.

முந்​தைய நாவல்​களில் பெருநில​வுடைமை கொண்ட பாத்​திரங்​களின் பேச்​சில் கிராமம் வருமே தவிர அங்கு நடக்​கும் தொழில்​களோ, உழைப்பு சார்ந்த புறவெளி​களோ, வீடு, சடங்​கு​கள் சார்ந்த அகவெளி​களோ வந்​த​தில்​லை. இந்​நிலையை உடைத்து முழு​மை​யான கிராம வெளி​களை​யும் மனிதர்​களை​யும் ‘நாகம்​மாள்’ முன்​வைத்​தது. அதன் முதல் அத்​தி​யாயமே கிராமச்​சந்தை ஒன்​றின் விவரணை​யை​யும் அங்கு இயங்​கும் மனிதர்​களை​யும் கொண்​டது​தான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in