என்.டி.ராஜ்குமார்: பன்முகச் சன்னதக் கலைஞன்

ஜூன்​ 2: என்​.டி.​ராஜ்கு​மாரின்​ 60வது பிறந்​த ​நாள்
என்.டி.ராஜ்குமார்: பன்முகச் சன்னதக் கலைஞன்
Updated on
2 min read

தமிழ்க் கலை இலக்​கி​யத்​தில் புது​மொழியை​யும் தளத்​தை​யும் கண்​டடைந்​தவர் என்​.டி.​ராஜ்கு​மார். அவரின் கவிதைகளை​யும் கலைச் செயல்​பாடு​களை​யும் ஒரு காலத்​தின் துணுக்​காகக் கொள்​ளாமல் கலை, இலக்​கிய வரலாற்​றின் நீண்ட தொடர்ச்​சிக்​குள் வைத்து வாசிக்க வேண்​டி​யுள்​ளது.

பெரும்​பாலும் ஏற்பு அழகியலைப் பேசி லெளகீக மனவெளி​யின் பரப்பை விரித்த கவிதை, கலை வார்ப்​பு​களுக்கு மத்​தி​யில் மாற்று அழகியலின் விகசிப்​போடு பத்​துக் கவிதைத் தொகுப்​பு​களை வெளி​யிட்டு இருக்​கிறார். ஒவ்​வொரு தொகுப்​பிலும் கலைச் செயல்​பாட்​டிலும் அவரது படைப்பு மனம் சித்​தர் சிந்​தனை, நவீனத்​துவ உடைப்​பு, தலித் அரசி​யல், வாய்​மொழி மரபு, மீவியல் காட்​சி​யமைப்​பு, நுகர்​வுக் காலச்​சார விடு​தலை ஆகிய​வற்​றின் ஒன்​றிணைப்பை நிகழ்த்​தி​யிருக்​கிறது.

சித்​தர் சிந்​தனை: கால​வெளி​யில் இன்​றள​வும் தனித்​துத் துலங்​கும் சித்​தர் பாடல்​கள் எளிய மக்​களின் குரலாக ஒலித்​தவை. பிர​மாண்​ட​மான தத்​து​வார்த்த கருத்​தி​யலுக்​குச் சுலப​மாக மறுமொழி கொடுத்​தவை. இந்த அம்​சங்​களைத் தனது படைப்​பு​களில் பெரு​வாரி​யாகக் கொண்​டிருக்​கிறார் என்​.டி.​ராஜ்கு​மார். ‘நெஞ்​சினிலே தீண்​டியதோர் கரும்​பாம்​பே’, ‘சூசக​மாய் உள்​நுழைந்​தென்னை ஆட்​டிடும் பாம்​பே’, ‘மிரட்​டாட்​டம் போட்​டாடி நெளி​யும் பாம்​பே/ குற்​றம் ஒன்​றும் இல்​லை​யென்று விளை​யாடு பாம்​பே’ என்று என்​.டி.​ராஜ்கு​மார் பாம்​போடு நிகழ்த்​துகிற உரை​யாடல் பாம்​பாட்​டிச் சித்​தரை நினை​வுக்கு கொண்​டு​வரு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in