காதல்: ஒரு நூற்றாண்டுப் பயணம்

காதல்: ஒரு நூற்றாண்டுப் பயணம்

Published on

பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆண்டறிக்கைகளின்படி, சென்னை மாகாணத்தில் 1927இல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 967. இதில் பாலுறவால் 237 பேரும், குடும்பச் சிக்கலால் 211 பேரும் கொல்லப்பட்டதாக அந்தத் தரவு தெரிவிக்கிறது. 2022இல் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட மொத்தம் 1,690 பேரில், சட்டவிரோதப் பாலுறவால் 126, காதல் விவகாரத்தால் 77, குடும்பச் சிக்கலால் 443, வரதட்சிணையால் 29, சிசுக்கொலை 7 என 682 பேர் கொல்லப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தரவுகள், குடும்​பங்​களில் நிலவும் பிரச்சினைகளை உணர்த்து​கின்றன. கொலைக்கான காரணங்​களில் அரசியல், வர்க்க, மதச் சிக்கல்​களை​விடக் குடும்பத்தின் உள்முரண்களே முன்னணியில் இருக்​கின்றன. அவமதித்தல், அடித்தல், புறக்​கணித்தல் போன்ற​வற்​றையும் கணக்கிட்​டால், குடும்ப உள்பகை பூதாகரமாக இருக்​கும். ஒரு நூற்றாண்​டுக்கும் மேலாக நீடிக்​கின்ற இச்சிக்​கல்​களைப் பற்றி விவாதிப்பது அவசியம்.

தாரமும் காதலும்: மந்தைகளாக அலைந்து திரிந்த மனிதர்களை மனைவி, கணவன், வாரிசுகள் எனக் குடும்ப​மாக்​கியது உற்பத்​தியும் சொத்துடைமை​யும்​தான். இதுதான் மனைவி​களைக் கணவர்கள் ஒடுக்குகிற முதல் வர்க்க ஒடுக்​குமுறை நிறுவனம் என ஏங்கல்ஸ் கூறுவது இந்தியக் குடும்​பங்​களுக்கும் பொருந்தும். உலக நாடுகளைப் போல் இந்தியக் குடும்​பங்​களில் சொத்துடைமைச் சமூகங்​களில் பலதார மணம், பொது மனைவியர் முறைகளில் பாலுறவு ஆண்களின் ஏகபோகமாக இருந்தது.

பாட்டாளி​களிடம் ஒருதார மணமுறை​யும், காதலித்துக் கரம்பற்று​வதும், கசந்தால் பிரிந்து மறுமணம் செய்யும் சுதந்​திரமும் மனைவிக்கும் கணவனுக்கும் இருந்தன.

ஒருதார மணத்தைப் பெண்கள் உருவாக்​கி​னாலும், முதலா​ளித்துவ அரசாங்கம் நலத் திட்டங்கள், ஓய்வூ​தியம் போன்ற​வற்றைக் கொடுக்கக் குடும்பத்தைக் கணக்கில் கொள்வதால் ஒருதார மணம் சட்டமாக​வும், அரசியல் பொருளாதார நிறுவன​மாகவும் இறுகியது.

வெவ்வேறு மணமுறைகள் பிரிட்டிஷ் – இந்தியாவில் ஒருதார மணக் குடும்பமாக உருமாறத் தொடங்கின. ஒருதா​ரமும் காதலும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தவை என்பதால், காதலிக்கும் சுதந்​திரம் வேண்டும் என்கிற விவாதத்தைச் சொத்துடைமைச் சாதிப் பெண்கள் முன்னெடுத்​தனர்.

சாதிச் சங்க மாநாடு​களில் காதலை ஆதரித்து ஆண்களும் தீர்மானங்களை நிறைவேற்றினர். கற்ற பெண்களுக்கு இணையான இணைக்​காக​வும், உள்சா​திகளை, சாதிகளை ஒழிக்​கவும் காதல் கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் காலனிய காலத்தில் ஏராளமாக வெளியாகின.

இணக்கமும் பிணக்​கமும்: காதலித்துக் கரம்பற்றுவது இயக்க​மாகத் தோன்றிய சொத்துடைமைச் சாதிகளி​லும், துணையைத் தேர்ந்​தெடுக்கும் சுதந்​திரம் பெற்றிருந்த பாட்டாளி​களிடமும் ஏற்பாட்டுத் திருமணங்​கள்தான் இக்காலத்தில் பெரும்​பாலும் நிகழ்​கின்றன. பணக்கார, நடுத்தர வர்க்​கங்கள் நற்குணங்​களாகிய அக அழகைப் புறக்​கணித்து, பொருளையும் புற அழகையும் நிபந்​தனை​யாக்கித் திருமணங்களை நடத்து​கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in