பாட்டினைப் போல் ஆச்சரியம் | இடம் பொருள் மனிதர் - 3

மருத்துவர் உடலையும் உயிரையும் மீட்க, பாடகர் உயிரையும் உணர்வையும் மீட்டார்
பாட்டினைப் போல் ஆச்சரியம் | இடம் பொருள் மனிதர்  -  3
Updated on: 
2 min read

ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காகச் சென்றிருந்தேன். பரிசோதனைகளை செய்துமுடித்த மருத்துவர் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னார். “இதயத்தில் அடைப்பு இருக்கிறது. அறுவைசிகிச்சைதான் பரிகாரம்.

அதுவும் உடனே செய்துகொள்வது நல்லது.” அதைக் கேட்டதும் உலகம் ஒருமுறை சுழற்சியை நிறுத்தியது. மீண்டும் சுழலத் தொடங்கியபோது சிகிச்சைக்கான ஆயத்தங்களும் பரிசோதனைகளும் தொடங்கின.

மருத்துவ சிகிச்சை இன்று வெகுவாக முன்னேறியிருக்கிறது. எந்தக் கோளாறையும் எளிதில் தீர்க்க முடியும். பெரும்பாலான நோய்களுக்கு மருந்தும் சிகிச்சையும் இருக்கின்றன. இதய அறுவையும் இன்று சுலபம்.

‘சிகிச்சை முடிந்ததும் ஹாயாகப் போகலாம். எப்போதும்போல இருக்கலாம்’ என்று மருத்துவ நிபுணர் குறிப்பிட்டார். அது ஆறுதலுக்குப் பதில் கவலையையே கொடுத்தது.

தொலைந்துபோன பிரக்ஞை

அறுவைசிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டது. அது பொங்கல் பண்டிகையை ஒட்டிய விடுமுறைக் காலம். மருத்துவர்கள் விடுமுறையில் செல்வதில் மும்முரமாக இருந்தார்கள். என்னைத் திறந்து இதயத்தை வெளியே எடுத்துப் பழுது நீக்கி மீண்டும் பொருத்தினார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு நாள்கள் கிடந்தேன்.

பூமியில் வெளிச்ச நரகம் அந்தப் பிரிவுதான். இரண்டாம் நாள் மாலை தனியறைக்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போதெல்லாம் பிரக்ஞை துல்லியமாக இருந்தது. நேரம் ஆக ஆக உணர்வுகள் மங்கத் தொடங்கின. யாரையும் எதையும் இனங்காண முடியாமல் மூளைக்குள் இருள் மூடிக்கொண்டது. அதன் பிறகு நடந்தவை உடனிருந்த மனைவியும் உறவினர்களும் நண்பர்களும் சொல்லித்தான் தெரியவந்தன.

Loading content, please wait...

X