கம்​பனின் கிளை நதி

(ஜூன் 24 கண்ணதாசன் பிறந்த நாள் - நூற்றாண்டு தொடக்கம்)
கம்​பனின் கிளை நதி
Updated on
2 min read

கவிதைக்​காக காலம் திறந்​து​வைத்த திரு​வாசல் கண்​ண​தாசன். அவரது மூச்சே தமிழாக இருந்​த​தால், அவரைச் சுற்​றி​யிருந்த காற்​றுகூட அவர் எழு​தாத பாட்​டாக ஒலித்​தது. கையில் பேனா பிடிக்​காமல் பாட்​டெழு​திய கவிஞன், நம் எல்​லாருக்​கும் பிடித்த கவிஞ​னான ரகசி​ய​மும் அது​தான். அலங்​கார அங்​கவஸ்​திரங்​களாக இருந்த திரைப்​பாடல்​களை மக்​களின் அன்​றாட ஆடைகளாக​வும் துயர இரவு​களின் போர்​வை​களாக​வும் மாற்​றியது அவரது மணித்​தமிழ்.

கண்​ணனைத் தோழ​னாக, தாயாக, தந்​தை​யாக, சேவக​னாக, அரச​னாக, சீட​னாக, சற்​குரு​வாக, குழந்​தை​யாக, காதல​னாக, காதலி​யாக, ஆண்​டா​னாக, குலதெய்​வ​மாக உள்​ளுக்​குள் உணர்ந்து மகிழ்ந்​தவன் பார​தி. அப்​படி அத்​தனை அவதா​ரங்​களாக​வும் தமிழறிந்த மக்​களெல்​லாம் கொண்​டாடி மகிழ்​கிற திரு​விழாக் கவிஞன் கண்​ண​தாசன்.

ஒரு முறை, “விமர்​சனத்​துக்கு அப்​பாற்​பட்​டது என்று ஏதாவது உண்​டா” என்று ஒரு பத்​திரி​கை​யாளர் கேட்​டபொழுது, “உண்​டு. அவை பிறப்​பும் இறப்​பும்” என்​றார் கண்​ண​தாசன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in