

வண்ணதாசன்
மேற்புறத் தோற்றத்தில் அமைதியை வைத்திருக்கும் மிகமிக ஆழமான கதைகள் வண்ணதாசனுடையவை. அத்தகைய கதைகளுள் ஒன்று ‘போய்க் கொண்டிருப்பவள்’.
புகைப்படக் கலைஞனான விருத்தாசலத்தின் மீது அன்னம் ஜூடிக்கு விருப்பம். வேறொரு ஆடவனை மணக்க நேர்கிறது. அவனோ காமுகன், வரைமுறை தவறிய சகவாசத்திலும் இருப்பான். சீரழிந்த மணவாழ்க்கை காதலனிடம் ஆறுதல் பெற வைக்கிறது. அதன் அடையாளமாக ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் காதலன், முன்பு எடுத்த அவளது அற்புதமான ஒரு புகைப்படத்தை பத்திரிகையில் வெளியிட பிரச்சனையாகிறது. கணவனாலும் காதலனாலும் நிம்மதியிழந்த ஜூடி குழந்தையின் பொருட்டு நகர்வதுதான் கதை.