புனைவில் உலவும் காந்தி | கதை அறியும் கலை

புனைவில் உலவும் காந்தி | கதை அறியும் கலை
Updated on
2 min read

மகத்​தான காவிய நாயகர்​களைப் போல, தன் அசாத்​திய செயல்​பாடு​களால் பேராளு​மை​யாக உயர்ந்​தவர் மகாத்மா காந்​தி. மனித சமூகத்​தில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​திய அவரது நெறி​முறை​கள், இலக்​கி​யத்​தில் அவரை ஒரு புதிய தொன்​மப் பாத்​திர​மாக மாற்​றின. தமிழில் காந்​தி​யைக் குறித்து சுமார் இருநூறு சிறுகதைகள் எழுதப்​பட்​டுள்​ளன. அந்த வரிசை​யில் தேவி​பாரதி எழு​திய ஒரு காந்​தி​யக் கதை​தான் ‘பிற​கொரு இரவு’.

கதை​யின் பின்​னணி: இந்​திய - பாகிஸ்​தான் பிரி​வினையோடு சுதந்​திரம் கிடைக்​கிறது. இரு தேசத்​தி​லும் இந்து முஸ்​லிம் கலவரங்​கள் மனிதர்​களைக் கொன்று குவிக்​கின்​றன. வன்​முறை​களால் நாடே மனித வெறுப்​பில் மூழ்​கிக்​கிடக்​கிறது. டெல்லி பிர்லா மாளி​கை​யில் நேரு மற்​றும் படேலின் பாது​காப்பு வளை​யத்​துக்​குள் அடைபட்​டுக் கிடக்​கும் காந்​தி, கலவரச் செய்​தி​களைக் கேட்​டுத் துடிக்​கிறார். எளிய மக்​களின் துயரங்​களும், பொதுச் சமூகத்​தின் அக்​கறை​யின்​மை​யும் அவரை ஆழமாக வருத்​துகின்​றன.

காந்​தி​யின் பயணம்: தன் குரு டால்​ஸ்​டாய் இறுதி காலத்​தில் வீட்டை விட்டு வெளி​யேறியது போல, காந்​தி​யும் நள்​ளிர​வில் பிர்லா மாளி​கையை விட்டு வெளி​யேறி, அமிர்​தசரஸ் நோக்கி ரயி​லில் பயணிக்​கிறார். இப்​பயணத்​தில், தன் பெய​ரால் உரு​வான போலி காந்​தி​களின் உலகத்தை அவர் காண்​கிறார். காந்தி வேடத்தை வியா​பார விளம்​பர​மாக்​கும் கடைக்​காரர், காந்​திய வழியைக் கேலி செய்​யும் போலிகள், காந்தி வடி​வில் இருந்​து​கொண்டே தேர்​தலில் நிற்​கத் துடிக்​கும் நிலப்​பிரபு, ஜாலியன்​ வாலா​பாக்​கைப் பணம் ஈட்​டும் சுற்​றுலாத் தலமாகக் கருதும் சுயநல​வா​தி​கள் எனப் பலரை​யும் காண்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in