ஜோகன் சௌத்ரி: சமூகத்தின் ஆழங்களை வரைந்தவர்

ஜோகன் சௌத்ரி: சமூகத்தின் ஆழங்களை வரைந்தவர்
Updated on: 
1 min read

கோடுகளை​யும் நிழல்​களை​யும் பயன்​படுத்தி கலை​யுல​கில் பெரும் அதிர்​வு​களை உண்​டாக்​கிய ஓவியர் ஜோகன் சௌத்ரி அண்​மையில் (25.10.2026) காலமானார். ‘உரு​வக் கலை’ பாணி​யில் அவர் வரைந்த உடல்​கள் இயல்​புக்கு மாறானதாக, பாதிப்​புக்​குள்​ளானதாக இருந்​தன. அவற்​றின் முக பாவனைகள், அசௌகரியத்​துக்​கும் ஆழ்​சிந்​தனைக்​கும் இடைப்​பட்ட நிலை​யில் வெளிப்​படுவ​தாகக் கருதப்​படு​கின்​றன.

ஓவியப் பின்​னணி குடும்​பத்​தில் பிறந்​ததால் இயல்​பாகவே அத்​துறை மீது அவருக்கு ஆர்​வம் ஏற்​பட்​டுள்​ளது. வங்​காளப் பிரி​வினைக் காலத்​தில் வளர்ந்​ததன் தாக்​கம், அவரது ஓவியங்​களில் தொடர்ந்து பிரதிபலித்​த​தாக ஆர்​வலர்​கள் தெரி​வித்​திருக்​கின்​றனர். அவரது கோடுகளும், உரு​வங்​களும், அவற்றின் தொட்​டுணரும் தன்​மையும் நம் நிலத்​துக்கே உரிய அவல நிலை​யையும் புதிர்த்​தன்​மையையும் உரு​வாக்​கு​கின்​றன.

எமர்​ஜென்சி கால​கட்​டத்​தில் அவர் வரைந்த ‘Tiger in the Moonlight’ ஓவியம், கலைஞர்​களுக்கு இருக்க வேண்​டிய சமூகப் பொறுப்​பைச் சுட்​டிக்​காட்​டு​கிறது. “கலை​யின் வழியே சமூக விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதே கலைஞர்​களின் முக்​கியக் கடமை” என்ற ஜோகன் சௌத்ரி, திரிணமூல் காங்​கிரஸ் சார்பில் மாநிலங்​களவை உறுப்​பின​ராகவும் (2014 - 2020) இருந்​திருக்​கிறார்.

ஜோகன் சௌத்ரி: சமூகத்தின் ஆழங்களை வரைந்தவர்
கேள்விகள் கண்டெடுத்த மொழி
Loading content, please wait...

X