கேள்விகள் கண்டெடுத்த மொழி

கேள்விகள் கண்டெடுத்த மொழி
Updated on: 
2 min read

திருநங்​கைகளை மையப் பாத்​திர​மாகக் கொண்டு முன்​னதாகச் சில படங்​கள் வெளிவந்​திருந்​தா​லும் ‘டோரதி’ திரைப்​படமும், அதன் வெற்​றியும் உரு​வாக்​கி​யிருக்​கும் விவாதங்​கள் சமூகத் தளத்​தில் மிக முக்​கிய​மானவை. கலை, இலக்​கியத்​தில் அந்த உரையாடல்​கள் சற்று முன்​னோக்கி நகர்ந்​துள்​ளன. 2005ஆம் ஆண்டு ரேவதி தொகுத்த ‘உணர்​வும் உரு​வ​மும்’ தொடங்கி லிவிங் ஸ்​மைல் வித்யா, பிரியா பாபு, கல்கி சுப்​ரமணி​யம் உள்​ளிட்​டோரின் தன்​வரலாறுகள், புனைவு​கள், கட்​டுரைகள் எனப் பல நூல்​கள் வெளியாகி​யிருக்​கின்​றன. இவை திருநர் இலக்​கிய வகைமையின் தொடக்​கக்​கட்​டம் எனலாம்.

இங்கே திருநர் என்​பது திருநங்​கைகளை​யும் திருநம்​பிகளை​யும் குறிக்​கும் பொதுச் சொல் என்​ப​தையும்; பால்புதுமையினர் என்​பது திருநர் உள்​பட தன்​பால் ஈர்ப்​பாளர்​கள், இருபால் ஈர்ப்​பாளர்​கள், பால் ஈர்ப்பு அற்​றவர்​கள் போன்​றோரைச் (LGBTQIA+) சுட்​டும் பெயர் என்​ப​தையும்; இவர்​களில் திருநங்​கைகள் மட்​டுமே கலை, இலக்​கியம், அரசி​யல், சமூகம் எனப் பல தளங்​களில் பெரு​மளவில் வெளிப்​பட்​டிருக்​கிறார்​கள் என்​ப​தையும் நினைவில் கொள்​வோம்.

Loading content, please wait...

X