ஒத்துழைப்புக் கூட்டாட்சி சாத்தியமாகுமா?

அதிகார மையப்படுத்துதலைவிடவும் மாநிலங்களின் சம்மதம்தான் முக்கியம்
ஒத்துழைப்புக் கூட்டாட்சி சாத்தியமாகுமா?
Updated on
3 min read

இந்திய அரசமைப்பானது ‘கூட்டாட்சி’ அமைப்பைக் கொண்டிருந்தாலும், அது அமெரிக்காவைப் போன்று ‘மாகாணங்களால் உருவாக்கப்பட்ட கூட்டாட்சி’ அல்ல; மாறாக தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கும் நோக்கில் வலுவான மத்திய அரசைக் கொண்ட கூட்டாட்சியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 1இல் ‘Union of States’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒருங்கிணைப்பு (Union) ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் ‘Federation of States’ என்று குறிப்பிடப்படவில்லை.

இதுவே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு. ஆனாலும் டாக்டர் அம்பேத்கர், “இந்திய அரசமைப்பானது கூட்டாட்சி அமைப்பைக் கொண்டதுதான். ஏனெனில், அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

கூட்டாட்சித் தத்துவம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி பதினொன்று (XI) என்பது இந்தியக் கூட்டாட்சியின் (Federalism) மையப்புள்ளியாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது. இது மத்திய அரசுக்கும் (Union) மாநில அரசுகளுக்கும் (States) இடையிலான அதிகாரப் பகிர்வு, சட்டம் இயற்றும் அதிகாரம், நிர்வாக உறவு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 7ஆவது அட்டவணையானது, மத்தியப் பட்டியல் (Union List), மாநிலப் பட்டியல் (State List), பொதுப் (ஒருங்கிணைந்த) பட்டியல் (Concurrent List) என அதிகாரங்களை மூன்று பட்டியல்களாகப் பிரிக்கிறது.

அதாவது, மத்தியப் பட்டியலில் கண்டுள்ள அம்சங்கள் (பொருள்) குறித்து நாடாளுமன்றம் மட்டுமே சட்டம் இயற்றலாம். மாநிலப் பட்டியலில் கண்டுள்ள அம்சங்கள் குறித்து மாநிலச் சட்டமன்றங்கள் சட்டம் இயற்றும்.

ஆனால், பொதுப் பட்டியலில் கண்டுள்ள அம்சங்கள் குறித்து மத்திய அரசும் சட்டம் இயற்றலாம், மாநில அரசுகளும் சட்டங்களை இயற்றலாம். இந்த அதிகாரம்தான் இந்தியக் கூட்டாட்சியின் அடிப்படைத் தூணாகக் கருதப்படுகிறது. ஆனாலும் கொடுத்துப் பறித்துக்கொண்டதைப் போல, அதில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதுதான் ‘கூட்டாட்சி’ என்கிற தத்துவத்துக்கு முரணாக இருக்கிறது.

அசாதாரண நிலைமை

அரசமைப்பு நிர்ணய அவை (Constituent Assembly) அரசமைப்பை உருவாக்கியபோது தேசப் பிரிவினை, மதக் கலவரங்கள் என இந்தியா மிகவும் அசாதாரண சூழ்நிலையில் இருந்தது. இந்தச் சூழல்தான் இந்தியக் கூட்டாட்சியின் (Federalism) வடிவத்தை நிர்ணயம் செய்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in