காலத்தை வென்ற கண்ணதாசன்

அன்றாட வாழ்க்கையின் பாடுபொருள்களைப் பாடியது, அவரை மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்த்தியது
காலத்தை வென்ற கண்ணதாசன்
Updated on
3 min read

‘பாரதிக்குப் பின்னர் தமிழ்க் கவிதையுலகம் நூறு மடங்கு முன்னேறியிருக்கிறது. பிழையில்லாமல் வெண்பா எழுதுவோர் மூவாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். பாரதிதாசன், முடியரசன், வாணிதாசன் போன்ற சிறந்த கவிஞர்களைக் காண்கிறோம்.

நூற்றுக்கணக்கான காவியங்களும் ஆயிரக்கணக்கான கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன’ – இருபதாம் நூற்றாண்டுக் கவிதையுலகின் நிலை குறித்த வாசகரின் கேள்விக்குக் கண்ணதாசன் அளித்த பதில் இது (‘தென்றல்’, 05.12.1959).

கவிதை இலக்கியத்தின் மீது கண்ணதாசன் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. கடந்த நூற்றாண்டில் கிளர்ந்து எழுந்த இலக்கிய வரலாற்றில், தவிர்க்க இயலாத தடத்தைப் பதித்துச் சென்றவர் கவியரசர் கண்ணதாசன்.

இலக்கியப் பயணம்

1927 ஜூன் 24 அன்று, சிவகங்கை மாவட்டத்தின் சிறுகூடல்பட்டி என்கிற சிற்றூரில் பிறந்தவர் கண்ணதாசன். பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. பயின்றது எட்டாம் வகுப்புவரை மட்டுமே. 16 வயதில் கவிதை புனையும் ஆற்றல் பெற்ற அவர், பல்வேறு வார, மாத இதழ்களில் வேலை தேடி அலைந்த கதை நெடியது.

பிற்காலத்தில் அவரது பாடல்களுக்காகத் திரையுலகம் தவமிருந்தது. ஆனால் ‘பொன்னி’ இதழுக்கு அவர் எழுதிய கவிதை, ‘கதைகள் மட்டும் அனுப்பவும்’ என்கிற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்ட வரலாறும் உண்டு.

தொடக்கத்தில் ‘மேதாவி’, ‘திருமகள்’ ஆகிய இதழ்களில் பணிபுரிந்தார். பிற்காலத்தில் ‘தென்றல்’, ‘முல்லை’, ‘கண்ணதாசன்’ என்கிற பெயர்களில் இலக்கிய இதழ்களைத் தொடங்கி நடத்துவதற்கு அவரது தொடக்கக் கால இதழ்ப் பணிகள் அடிப்படையாகின. இதழ்களின் மூலம் ஏற்பட்ட தொடர்புகள் அவருக்குத் திரையுலகின் வாசல் கதவுகளைத் திறந்துவிட்டன.

கண்ணதாசனின் எழுத்துப் பணி அவரை இயல்பாகவே இயக்கங்களின்பால் இட்டுச் சென்றது. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயல்பட்டார்.

கல்லக்குடி போராட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் கண்ணதாசன். ‘ஆயுள்காலம் முழுவதும் அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்’ என்று எழுதினார். ஆனால் திமுக-வைவிட்டு விலகி, ஈ.வெ.கி.சம்பத் தொடங்கிய தமிழ்த் தேசியக் கட்சியில் இணைந்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in