ஏஐ மூலம் மாணவர் சிந்தனையை வளர்ப்பது எப்படி? | செயற்கை நுண்ணறிவு சிறப்புக் கட்டுரை - 4

நல்ல ஆசிரியர் மாணவருக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களிலிருந்து சில கேள்விகளைக் கேட்டு, அவரே விடையைக் கண்டறிய வழிகாட்டுவார்
ஏஐ மூலம் மாணவர் சிந்தனையை வளர்ப்பது எப்படி? | செயற்கை நுண்ணறிவு சிறப்புக் கட்டுரை - 4
Updated on
3 min read

இன்றைய டிஜிட்டல் உலகமும் செயற்கை நுண்ணறிவும் நமது மூளையின் உயர்நிலைச் சிந்தனைச் செயல்பாடுகளைப் பெருமளவு குறைத்துவருகின்றன. மாணவர்களின் கற்றல் செயல்பாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. எனினும், இவ்விஷயத்தில் உடனடியாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

செயற்கை நுண்ணறிவு எவ்வளவுதான் திறம்படவும் அதிவிரைவாகவும் செயல்பட்டாலும்—கற்பனைத்திறன், சிந்தனைத்திறன், ஆக்கபூர்வப் படைப்பாற்றல், மனிதநேய அடிப்படையில் அறம் சார்ந்த முடிவுகளை எடுத்தல் போன்றவை மனிதர்களுக்கே உரிய தனித்துவங்கள்.

மூளையின் முக்கியத்துவம்

நாம் முதன்முதலாக மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது, கவனம் சிறிதும் சிதறாமல் கண்ணும் கருத்துமாய் ஓட்டுவோம். அந்த நேரத்தில் நமக்கு வேறு எந்தச் சிந்தனையும் ஓடாது. மூளை முழு விழிப்புடன் (Full Alert Mode) இருக்கும்.

ஆனால், கற்றுக்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படி ‘கியர்’ மாற்ற வேண்டும் என்றெல்லாம் நாம் யோசிப்பதில்லை. வெவ்வேறு சிந்தனைகளில் இருந்தபடியே எச்சரிக்கையுடன் வண்டியை ஓட்டுவோம். வாகனச் சந்திப்பில் சிவப்பு விளக்கைக் கண்டவுடன், பிரேக்கின் மீது கால் தானாகவே செல்கிறது!

தொடக்கத்தில் ஒவ்வொன்றையும் யோசித்துச் செய்த நாம், பிறகு எப்படி இவ்வளவு இயல்பாகச் செய்கிறோம்? இதற்கு அடிப்படையான காரணம் - நமது மூளை இந்தச் செயலைத் தன் ‘தானியங்கிப் பிரிவுக்கு’ மாற்றிவிடுவதுதான்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளைவிடவும் நம்முடைய மூளைதான் நம்மிடமிருந்து அதிகச் சக்தியைப் பெறுகிறது. மூளை வேறு எந்த வேலையும் செய்யாமல் இருக்கும்போதே, நாம் உண்ணும் உணவிலிருந்து உருவாகும் ஆற்றலில் ஏறக்குறைய 25%ஐப் பயன்படுத்திக் கொள்கிறது.

அதுமட்டுமல்ல, ஒரு விஷயத்தில் நாம் தீவிரமாகக் கவனம் செலுத்தும்போது, உடலின் மற்ற தேவைகளைக் கவனிக்க மூளை தவறவிட்டுவிடும். இதனால்தான் தீவிரமான சிந்தனையில் இருக்கும்போது பசி, தூக்கம் போன்ற உணர்வுகள் நமக்குத் தெரிவதில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in