கொசுக்களுக்கு எதிரான போரின் வரலாறு

நோய்களும் மருத்துவமும் பொருளாதாரமாகவும் அதிகாரமாகவும் இருக்கின்றன
கொசுக்களுக்கு எதிரான போரின் வரலாறு
Updated on
3 min read

தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் பரவுவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் பேசுபொருள் ஆகியிருக்கின்றன. காய்ச்சல்களின் தோற்றக் காலத்தைக் கூறுவது கடினம். பண்டைய காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அப்போது காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுவது ஆய்வுக்குரியது.

காய்ச்சலின் பெயர்கள், அவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை, காய்ச்சலைப் போக்கும் சிகிச்சைகள் போன்ற விவரங்கள் நவீன காலத்தில்தான் ஏராளமாகக் கிடைக்கின்றன. நோய்களும் மருத்துவமும் பொருளாதாரமாகவும் அதிகாரமாகவும் இருப்பதால் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

மருத்துவ வரலாறு குறிப்பிடும்படியாக இல்லாததால் சமகாலக் காய்ச்சல்கள் புதிய நோய்களாக நம்பப்படுகின்றன. காலனியக் காலத்தில் இன்புளூயென்ஸா, மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன.

முறைக்காய்ச்சல், விஷம ஜ்வரம் என அழைக்கப்பட்ட மலேரியா காய்ச்சலைக் கொசுக்கள்தான் உருவாக்கியதாக ‘வைத்திய கலாநிதி’ இதழ் 1914 டிசம்பரில் எழுதியது. யானைக்கால் நோய்க்கும் டெங்கு காய்ச்சலுக்கும் கொசுக்கள்தான் காரணம் என ‘ஆரோக்கிய தீபிகை’ 1924 டிசம்பரில் குறிப்பிட்டது.

ஆக, டெங்கு ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றும் மனிதர்களைத் தாக்குகிறது. எல்லா நாடுகளிலும் 1919 - 1920ஆம் ஆண்டுகளில் பலரும் இன்புளூயென்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இத்தகைய காய்ச்சல்களால் இந்தியாவில் 1910களில் ஆண்டுதோறும் தோராயமாக 50,000 பேர் இறந்தனர்.

சென்னை மாகாணத்தில் எந்தெந்த நோய்களால் இறப்புகள் ஏற்படுகின்றன என ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டன. இவற்றின்படி சின்னம்மை, காலரா, பிளேக் ஆகிய பெருந்தொற்று நோய்களைவிடவும் காய்ச்சல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

கொசுவும் காய்ச்சலும்

காய்ச்சலால் கொத்துக்கொத்தாக மனிதர்கள் இறந்ததால் அவற்றுக்கான காரணங்களைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. விஷக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவரின் ரத்தத்தில் நுண்ணுயிர்கள் இருப்பதை பிரெஞ்சு ராணுவ மருத்துவர் லவெரன், 1880 நவம்பரில் கண்டுபிடித்தார். கொசுவின் இரைப்பையில் விஷக் கிருமிகள் வளர்வதை ரொனால்டு நிரூபித்தார்.

‘அனோபிலெஸ்’ என்னும் கொசு நுண்ணுயிர்களை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரப்புகிறது என்பதையும் இவர்தான் கண்டறிந்தார். இது, 1898ஆம் ஆண்டில் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இத்தாலிய அறிஞர்களின் ஆராய்ச்சியிலும் ரொனால்டின் முடிவே கண்டறியப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in