

உணவு என்பது வெறும் பசி ஆற்றுவதற்கான பண்டம் மட்டுமல்ல; அது ஒரு நிலப்பரப்பின் கலாச்சாரம், உழைப்பு மற்றும் வட்டார வாழ்வியலின் சாட்சியாகத் திகழ்கிறது என்பதை மருத்துவர் வி.விக்ரம்குமார் தனது ‘உணவு சுற்றுலா’ நூலில் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார். கர்நாடகத்தின் ஆகும்பே மற்றும் மங்களூரின் அடையாளமான சுவை மிகுந்த நீர்தோசை, மகாராஷ்டிரத்தின் லோனாவாலா ஃபுட்ஜ் இனிப்பு வகை, ஆற்காடு மக்கன் பேடா, அரக்கு பள்ளத்தாக்கு பழங்குடியின மக்களின் மூங்கில் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, கேரளத்தின் ஷார்ஜா ஷேக், காஷ்மீரின் கஹ்வா என இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 வகையான உணவுகள் பற்றிய 50 கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு, தமிழ் வாசகர்களுக்கு ஒரு சுவையான பயண அனுபவத்தைத் தருகிறது.
உணவு சுற்றுலா
மருத்துவர் வி.விக்ரம்குமார்
இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications தொடர்புக்கு: 7401296562