

அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின் கறுப்பின மக்களுக்கு நேர்ந்த கொடுந்துயரங்களை இந்நாவல் பேசுகிறது. புலிட்சர் விருது மற்றும் நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்ற டோனி மாரிசனின் இந்நாவல், வரலாற்றை அசலாகப் பதிவுசெய்தமைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளின் பாராட்டைப் பெற்றது. அடிமை வாழ்விலிருந்து வெளியேறத் துடிக்கும் ஒவ்வொரு கறுப்பரின் இதயமும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளிப்பது, அதன் ரணத்தோடு கடத்தப்பட்டுள்ளது. நர்மதா குப்புசாமி தனது சரளமான தமிழில் அவர்களது வலியை மிக மிக நெருக்கமாக உணரச் செய்துள்ளார்.
செல்லமே (மொழிபெயர்ப்பு நாவல்)
ஆசிரியர்: டோனி மாரிசன்
தமிழில்: நர்மதா குப்புசாமி
எதிர் வெளியீடு
விலை: ரூ.599