அரசின் கடன் சுமை: கேள்விக்கு அப்பாற்பட்டதா?

அரசின் கடன் சுமை: கேள்விக்கு அப்பாற்பட்டதா?
Updated on
3 min read

தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் அண்மையில் ஒரு நேர்காணலில், ‘அரசு வாங்கும் கடனைப் பற்றி மக்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்று அர்த்தம் கொள்ளப்படும் வகையில் கேள்வி எழுப்பியிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது.

அவரது கூற்றுப்படி - தனிநபர்கள் கடன் வாங்கினால் அவர்களே திருப்பிச் செலுத்த வேண்டும்; ஆனால் அரசு கடன் வாங்கினால் அது அரசின் பிரச்சினை, மக்களின் பிரச்சினை அல்ல. “அரசு என்பது அன்றாடம் வருமானம் ஈட்டிச் செலவு செய்யும் ஒரு தனித்த அமைப்பு. எனவே கடன் குறித்த பொதுமக்களின் கவலை தேவையற்றது” என்கிற ரீதியில் அவர் வாதிட்டுள்ளார். இது சரியா?

அரசும் மக்களும்: அரசின் கடனுக்கும் குடிமக்​களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற வாதம், பொது நிதி மேலாண்​மையின் (Principles of Public Finance) அடிப்​படைக்கே எதிரானது. ஓர் அரசு ஒரு தனியார் நிறுவனத்தைப் போலத் தனித்து வருவாயை உருவாக்கு​வ​தில்லை.

அரசின் வருமானம் என்பது வரி, கட்டணங்கள், மறைமுக வரிகள் மூலம் மக்களிட​மிருந்தே பெறப்​படு​கிறது. அரசு இன்று வாங்கும் கடன் என்பது, எதிர்கால வருவாயைத் திருப்பிச் செலுத்து​வதற்காக அடகு வைப்ப​தாகும். எளிமை​யாகச் சொன்னால், இன்றைய கடன் என்பது நாளைய வரிச் சுமை அல்லது மக்கள் நலத் திட்டங்​களுக்கான நிதிக்​குறைப்பு ஆகும்.

அரசின் கடன் என்பது வெறும் கணக்குத் தாள்களில் இருக்கும் எண்கள் மட்டுமல்ல; அது நீண்ட​காலத் தாக்கங்களை ஏற்படுத்​தக்​கூடியது. கடன் அதிகரித்​தால், வட்டிச் சுமையும் அதிகரிக்​கும். ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்​களில், அரசின் வருவாய்ச் செலவினங்​களில் பெரும் பகுதி வட்டி செலுத்து​வதற்கே செலவிடப்​படு​கிறது.

உதாரணமாக, 2024-25ஆம் நிதியாண்டில் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ. 63,722 கோடியைத் தமிழ்நாடு செலவு செய்துள்ளது. இது, அதே ஆண்டில் முதலீட்டுச் செலவிற்காகச் செய்யப்பட்ட (ரூ. 47,681 கோடி) அளவைவிட மிக அதிகம். இன்னும் தெளிவாகச் சொல்வதென்​றால், 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கொடுக்​கப்​பட்​டுள்ள தரவுகளின்படி, தமிழ்நாடு அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயிலும், ஏறக்குறைய 14.1 பைசா வட்டியாக மட்டும் செலவிடப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in