கற்றலை முழுமையாக்குவதே நோக்கம்! - விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கற்றலை முழுமையாக்குவதே நோக்கம்! - விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
Updated on
2 min read

இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கு வடிவம் கொடுத்த அறிவியலாளர்களில் முக்கியமானவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ‘சந்திரயான்’ உள்ளிட்ட முக்கிய விண்வெளித் திட்டங்களுக்குத் தலைமையேற்று முத்திரை பதித்தவர்.

தற்போது தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்ட வரையறைக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவருடன் உரையாடியதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது:

Q

நமது விண்வெளித் திட்டங்களின் வரிசையில், அடுத்த பத்து ஆண்டுகளில் எந்த இலக்கை நோக்கி நாம் முன்னேற வேண்டும்?

A

விண்வெளி ஆய்வுத் துறையில் நாம் இன்னும் சற்று வேகமாகச் செல்ல வேண்டும். இதில் இரண்டு நோக்கங்கள் முதன்மையானவை. நிலவில் பத்திரமாக இறங்கிய நாம், அங்கே சில பொருள்களைச் சேகரித்துக்கொண்டு, பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும்.

ககன்யான் திட்டத்தை இன்னும் சற்று முடுக்கிவிட்டு, இந்திய விண்வெளி வீரர்களை நம் நாட்டிலிருந்தே விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக அவர்கள் மீண்டும் திரும்பி வரும் முயற்சிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, இப்போது இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுள் காலம் முடிந்த பிறகு, அடுத்த விண்வெளி மையத்தை உலக நாடுகளுடன் இணைந்து அமைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த நகர்வின் மீது இந்தியர்களின் கவனமும் பங்களிப்பும் உறுதியாக இருக்க வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in