உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வேலு ஆசானின் பறையிசை எழுச்சியுடன் ஒலித்துவருகிறது. இவரது 40 ஆண்டு காலக் கலைப் பணியை அங்கீகரித்து மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது.
இருபதுக்கும் அதிகமான விருதுகளைப் பெற்று தமிழரின் தொன்மை இசைக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் வேலு ஆசானுடன் உரையாடியதிலிருந்து...