நூலகங்களும் நூலக அறிவியலும் மதிக்கப்பட வேண்டும்! - நூலகச் செயல்பாட்டாளர் பா.பெருமாள்

கருத்துப் பேழை சந்திப்பு
பா.பெருமாள்

பா.பெருமாள்

Updated on
3 min read

பொது நூலகக் கட்டமைப்பைப் பாதுகாக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் பா.பெருமாள். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் நூலகராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். ‘நூலக அறிவியலின் தந்தை’ எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனின் சீடர்; அவரால் ‘நூலக ஞானி’ எனப் பாராட்டப்பட்டவர்.

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பெருமாளுக்கு 93 வயது. ‘நூலக ஞானி எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகப் பணி அறக்கட்டளை’யைத் தோற்றுவித்து உற்சாகமாக இயங்கி வருபவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்...

Q

உங்களது நூலகப் பணி எப்படித் தொடங்கியது?

A

நான் 1960இல் பி.ஏ. முடித்த பின்னர், கோவை வனக் கல்லூரியில் நூலகர் ஆனேன். வாசிப்பதில் ஆர்வம் இருந்ததால், இந்தப் பணி மிகவும் பிடித்திருந்தது. பின்னர் நூலக அறிவியலில் இளங்கலை பயில சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காததால், கேரளப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்குதான் எஸ்.ஆர்.ரங்கநாதனை முதன்முதலாகச் சந்தித்தேன்.

அவர் வருகைதரு பேராசிரியராக இருந்தார். அவரது முன்னாள் மாணவரான ஐசக், துறைத் தலைவராக இருந்தார். நூலக அறிவியலை நன்கு புரிந்துகொள்வதற்கான அடித்தளம் அங்கு அமைந்தது. டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நூலகர் வேலைக்கு விண்ணப்பித்தபோது, நான் கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்பதே எனக்கு வேலை கிடைக்கக் காரணமாக இருந்தது.

அந்த அளவுக்கு ரங்கநாதனும் ஐசக்கும் மதிக்கப்பட்டனர். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் பணி. மொத்தம் 33 ஆண்டுகள் நூலகராகப் பணிபுரிந்தேன். இக்னோ உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் தனிப்பட்ட முறையில் நூலக அறிவியலைக் கற்பிப்பது எனது இன்னொரு பணி.

Q

நூலக அறிவியலின் அடிப்படைகள் என்ன?

A

ரங்கநாதன் எழுதிய ‘Prolegomena to Library Classification’ (நூலக வகைப்பாட்டுக்கு அறிமுகம்) என்கிற நூல், இத்துறையில் வேதம்போலக் கருதப்படுகிறது. அதில் ஐந்து அடிப்படைகளை முன்வைக்கிறார். முதலாவது, வாசிப்பதற்குத்தான் நூல்கள். அவை அனைவருக்குமானவை. ஒவ்வொரு நூலுக்கும் வாசகர் உண்டு.

நூல்கள் முறையாகக் கவனப்படுத்தப்பட வேண்டும். வாசகரின் ஒவ்வொரு நொடி நேரமும் முக்கியமானது. நூலகம் என்பது வளர்ந்துகொண்டே செல்லக்கூடியது. அதற்கேற்ப வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஒரு நூலகர் இவற்றை உள்வாங்கிக்கொண்டால் போதும். நூலகத்தை மிகச் சிறப்பாக நடத்த முடியும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in