நிதி மோசடியில் ஏமாறுவதற்குப் பேராசைதான் காரணம்! - முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன்

கருத்துப்பேழை சந்திப்பு
நிதி மோசடியில் ஏமாறுவதற்குப் பேராசைதான் காரணம்! - முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன்
Updated on
3 min read

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை போன்ற தென் மாவட்ட நகரங்களில் வாழும் ஆயிரக்கணக்கான சாமானிய மக்கள் ஆன்லைன் செயலிகள், அந்நியச் செலாவணி (Forex) வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முதலீட்டை இரண்டு மடங்காகத் தருவதாகக் கூறி ஆசை காட்டும் மோசடிக்காரர்களிடம் தங்கள் பணத்தை மக்கள் இழப்பதற்கான காரணங்கள் குறித்து முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் சீனிவாசனுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

Q

ஆயிரக்கணக்கான தென் மாவட்ட மக்கள் கைபேசிச் செயலியை நம்பி ஏமாந்துள்ளனர். இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

A

கடந்த 2023இல், காஞ்சிபுரத்தில் ஐ.எஃப்.எஸ். (IFS - International Financial Services) வகை மோசடி வழக்கு ஒன்று வந்தது. அங்கே ஏமாற்றிய நிறுவனம் விரித்திருந்த வலையில் அப்பகுதியின் காவல் துறையைச் சேர்ந்த பலரே விழுந்தார்கள். அந்த வழக்கின் விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதில் சம்பந்தப்பட்ட நிறுவனமும் மோசடி செய்த குழுவும் தலைமறைவாகிவிட்டன.

இப்போது மதுரை, சிவகங்கை பகுதி மக்கள் உழைத்துச் சேர்த்த பணத்தை இழந்திருக்கிறார்கள். உழைக்கும் மக்களும் கிராமியப் பண்பாடும் கொண்ட இதுபோன்ற நகரங்களைக் குறிவைத்தே சில நபர்கள் மோசடிகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். காரணம், அங்குள்ள மக்கள், தோண்டித் துருவிக் கேள்விகள் கேட்க மாட்டார்கள்.

இதுபோன்ற ஆசாமிகளிடம் படித்தவர்களே முதலீடு செய்து திரும்பத் திரும்ப ஏமாறுவதற்குப் பேராசைதான் முக்கியக் காரணம்.

இணைய டிஜிட்டல் செயலிகள் பின்னால் இருந்துகொண்டு லாபம் வருவதுபோல் செயற்கையாகக் காட்டி ஏமாற்ற முடியும் என்பதைப் பற்றி மக்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. தங்களுடைய கைபேசித் திரையில் பார்ப்பது நிஜம் என நம்புகிறார்கள்.

இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை.இந்தியாவில் ஒரு முதலீட்டுத் திட்டத்தில் பணம் போட வேண்டும் என்று முடிவெடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதா என்று பாருங்கள்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள் என்றால், அந்த நிறுவனம் செபியின் (SEBI) அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டத்தை வாங்குகிறீர்கள் என்றால், இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை - மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏ) அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்றின் அங்கீகாரத்தைப் பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் ‘லிஸ்டட் கம்பெனி’கள் ஆக இருக்கும்.

கம்பெனிச் சட்ட வாரி யத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும். பலர், பாதுகாப்பானது என்று நினைத்துக்கொண்டு நகைச்சீட்டில் பணம் போடுகிறார்கள். நகைக் கடைகள் நகைச்சீட்டு நடத்த அங்கீகாரம் கிடையாது. புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரை நம்பியே பலர் ஏமாந்திருக்கிறார்கள்.

நகைக் கடையில் முதலீடு என்பது உங்கள் சொந்த ‘ரிஸ்க்’! மற்ற வகை முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், அது செயலியாக இருந்தாலும் சரி, வேறு எந்த வழிமுறையாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு பெரிய நிறுவனம் என்றாலும், அந்த நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த உரிம எண்ணைக் காட்டும்படி கேட்க வேண்டும்.

அதை ரிசர்வ் வங்கியின் இணையத்தளத்தில் சரிபார்த்தால், யார் பெயரில் இருக்கிறது, உரிமம் காலாவதி ஆகாமல் இருக்கிறதா என்பதை அறியலாம். நிறுவனம் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிற முகவரியையும் வைத்து அந்த நிறுவனத்தின் பதிவுத் தன்மையை நீங்கள் உறுதிசெய்துகொள்ளலாம்.

Q

அதிக லாபம் தருகிறேன் என்று சொல்லும் ஒரு நிறுவனம் சரியானதா, பாதுகாப்பானதா என்பதை மக்கள் எப்படி அறிந்துகொள்வது?

A

இந்தியாவில் ஒரு முதலீட்டுத் திட்டத்தில் பணம் போட வேண்டும் என்று முடிவெடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதா என்று பாருங்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள் என்றால், அந்த நிறுவனம் செபியின் (SEBI) அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டத்தை வாங்குகிறீர்கள் என்றால், இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை - மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏ) அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்றின் அங்கீகாரத்தைப் பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் ‘லிஸ்டட் கம்பெனி’கள் ஆக இருக்கும்.

கம்பெனிச் சட்ட வாரி யத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும். பலர், பாதுகாப்பானது என்று நினைத்துக்கொண்டு நகைச்சீட்டில் பணம் போடுகிறார்கள். நகைக் கடைகள் நகைச்சீட்டு நடத்த அங்கீகாரம் கிடையாது. புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரை நம்பியே பலர் ஏமாந்திருக்கிறார்கள்.

நகைக் கடையில் முதலீடு என்பது உங்கள் சொந்த ‘ரிஸ்க்’! மற்ற வகை முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், அது செயலியாக இருந்தாலும் சரி, வேறு எந்த வழிமுறையாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு பெரிய நிறுவனம் என்றாலும், அந்த நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த உரிம எண்ணைக் காட்டும்படி கேட்க வேண்டும்.

அதை ரிசர்வ் வங்கியின் இணையத்தளத்தில் சரிபார்த்தால், யார் பெயரில் இருக்கிறது, உரிமம் காலாவதி ஆகாமல் இருக்கிறதா என்பதை அறியலாம். நிறுவனம் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிற முகவரியையும் வைத்து அந்த நிறுவனத்தின் பதிவுத் தன்மையை நீங்கள் உறுதிசெய்துகொள்ளலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in