வள்ளுவத்தின் வழி நடந்த மாபெரும் தமிழறிஞர்

அஞ்சலி: இ.சுந்​தரமூர்த்​தி
வள்ளுவத்தின் வழி நடந்த மாபெரும் தமிழறிஞர்
Updated on
2 min read

தமிழுல​கம் நன்கு அறிந்த பேராளு​மை​களுள் முதன்​மை​யானவர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்​தி. கோவை வெள்​ளலூரில் 1942இல் பிறந்த இ.சு., வாழ்​நாளின் இறு​திவரை தமிழ்ப் பணி​யையே மூச்​சாகக் கொண்டு வாழ்ந்​தவர். ஒன்​றாம் வகுப்​பில் தொடக்​கப் பள்ளி ஆசிரிய​ராகத் தன் பணி​யைத் தொடங்​கிய​வர் என்​ப​தைப் பெரு​மிதத்​துடன் நினை​வு​கூர்​வார். ‘பரிமேலழகர் திருக்​குறள் உரைத்​திறன்’ என்​னும் முனை​வர் பட்ட ஆய்​வு, இவருடைய சிந்​தனைப் புலத்​தைக் கட்​டமைத்​தது.

சென்​னைப் பல்​கலைக்​கழகத்​தில் ஆய்​வுப் பாதை சென்​னைப் பல்​கலைக்​கழகத்​தின் திருக்​குறள் இருக்​கையி​லிருந்து கல்​விப் பணி​யைத் தொடங்​கி​னார். அறிஞர்​கள் மு.வரத​ராச​னார், க.த.​திரு​நாவுக்​கரசு ஆகியோரின் அரவணைப்​பும், பேராசிரியர் மு.சண்​முகம்​பிள்​ளை​யுட​னான பணி​யும் இவருக்​குள் சுவடி​யியல், பதிப்​பியல் சார்ந்த பேரார்​வத்​தைத் தூண்​டின. பின்​னர் பல்​கலைக்​கழகத்​தின் தமிழ்​மொழித்​துறை, தமிழ் இலக்​கி​யத்​துறை ஆகிய​வற்​றில் பேராசிரிய​ராக​வும் துறைத் தலை​வ​ராக​வும் உயர்ந்து முத்​திரை பதித்​தார். பல்​கலைக்​கழகப் பதிப்​புத்​துறை​யின் இயக்​குந​ராக​வும் திறம்​படச் செயல்​பட்​டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in