வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒரே திசையில்...

வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒரே திசையில்...
Updated on
3 min read

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்று ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி எந்த அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்கிற கேள்வி மிக முக்கியமானது. இதுவரை வளர்ச்சி என்பது பெரும்பாலும் உற்பத்தி அளவுகள், வருமானம், முதலீட்டு மதிப்பு, வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஆகியவற்றின் மூலம் மட்டுமே கணக்கிடப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில், வளர்ச்சி என்பது அதன் தாக்கங்களோடும் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும் என்கிற புரிதல் வலுப்பெற்றுவருகிறது.

இந்​தச் சூழலில்​தான் இஎஸ்ஜி (ESG) - சுற்றுச்​சூழல் (Environmental), சமூகம் (Social), நிர்வாகம் (Governance) - என்கிற கருத்து இந்திய நிறு​வனங்​களின் செயல்பாடுகளில் முக்கிய இடத்தைப் பெற்​றுள்​ளது. இஎஸ்ஜி என்பது ஒரு புதிய சட்ட வார்த்தை அல்ல; அது வளர்ச்​சி​யின் தரத்தை அளவிடும் ஒரு விரிவான கட்​டமைப்பு.

இருப்பினும், இந்​தி​யா​வில் இந்த நடை​முறை பெரும்​பாலும் விதி​முறை​கள், அறிக்கைகள், வெளியிட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றுடன் மட்​டுமே இணைக்கப்​பட்​டிருக்​கிறது. இந்த அணுகு​முறை தொடரு​மானால், இஎஸ்ஜி தனது அடிப்​படை நோக்​கத்தை இழந்து, ஒரு நிர்​வாகச் சுமை​யாக மட்​டுமே மாறும் அபாயம் உள்​ளது.

இந்​தி​யா​வில் நில​வரம்: கடந்த சில ஆண்டு​களில் இஎஸ்ஜி குறித்த விவாதம் இந்தியா​வில் வேகமாக வளர்ந்துள்ளது. பங்குச்​சந்தை கட்டுப்​பாட்டு அமைப்பு​கள், வங்கி - நிதி நிறு​வனங்​கள், சர்வதேச முதலீட்​டாளர்கள் ஆகியோர் இஎஸ்​ஜியைப் பின்​பற்றுவதை முக்கிய அளவு​கோலாக மாற்றி​யுள்​ளனர். குறிப்​பாக, பெரிய பட்டியலிடப்​பட்ட நிறு​வனங்​களுக்கு இஎஸ்ஜி தொடர்பான அறிக்கைகள் இன்று கட்டாய​மாகி​உள்ளன.

இதன் விளை​வாக, இஎஸ்ஜி என்பது இனி விருப்​பமான ஒன்றல்ல; அது நிறு​வனங்​களின் தினசரி நிர்​வாகத்​தின் ஒரு பகுதியாக மாறிவ​ரு​கிறது. ஆனால், நடைமுறை நிலைமை இதைவிட ஆழமான சிக்​கல்​களைக் கொண்​டுள்​ளது.

பல நிறு​வனங்​களில் இஎஸ்ஜி என்பது அறிக்கைகள் தயாரித்​தல், தரவுகள் சேகரித்​தல், வெளி​யிடு​தல், விதி​முறை​களைப் பின்​பற்றுதல் என்கிற அளவிலேயே நிற்​கிறது. உற்பத்தி முறை, வளப் பயன்​பாடு, தொழி​லாளர் பாது​காப்பு, நிர்வாக முடிவெடுத்தல் ஆகிய அடிப்​படைச் செயல்​பாடு​களில் இஎஸ்ஜி முழு​மையாக ஊடுரு​வ​வில்​லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in