மக்களாட்சியும் கட்சி அபிமானமும்

அரசின் திட்டங்களை / செயல்பாட்டைக் கவனித்து, ஆக்கபூர்வமாக விமர்சிக்க வேண்டும்
மக்களாட்சியும் கட்சி அபிமானமும்
Updated on
2 min read

மக்களாட்சியில், மக்கள் வெறும் எண்ணிக்கை அல்ல. அவர்கள் முக்கியமான பங்குதாரர்கள் / பங்கேற்பாளர்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தங்கள் ‘பங்களிப்பை’ உணர்ந்து, தங்கள் சார்புநிலையின்படி ஒரு கட்சியை ஆதரித்துப் பேசுவதும் தங்களுக்கு ஒவ்வாத கட்சியை எதிர்த்து வாதம் செய்வதும் எப்போதும் நடப்பதுதான்.

அதேபோன்று, தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தங்கள் சார்புநிலைக்கு எதிரான கட்சி ஆட்சி அமைத்தால் அதை ஏற்க முடியாமலும், தங்களுக்கு விருப்பமான கட்சி ஆட்சி அமைக்கும்போது மக்கள் பிரச்சினை அனைத்துக்கும் விடிவு வந்துவிட்டதுபோலவும் கொண்டாடும் மனநிலையைப் பார்க்கிறோம்.

இந்தச் சார்பு நிலை அல்லது எதிர்ப்பு நிலை தேர்தலைத் தாண்டி மக்களிடம் தொடர்ந்தால் என்னவாகும்? அப்போது மக்களாட்சியில், மக்களின் ‘பங்களிப்பு’ எப்படி இருக்கும்? குறிப்பாக, சமூக ஊடகங்களின் யுகத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த / புரிந்துகொண்ட தகவலின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருக்கும்போது, சார்பு நிலை / எதிர் நிலையால் ஏற்படும் விபரீதங்கள் என்ன? ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை, திட்டங்களைக் கவனித்து, ஆக்கபூர்வமான விமர்சனங்களை மக்கள் எப்போதும் முன்வைக்க வேண்டும்.

ஆனால், அது கட்சி சார்பற்று, நடுநிலையாக இருப்பது அவசியம். அதே நேரம், ஆட்சியாளர்கள் பற்றிய விமர்சனங்களும் திட்டங்கள் பற்றிய கருத்துகளும் தங்கள் ஆழ்மனதில் உள்ள கட்சி சார்பின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில்தான் விமர்சனம், விவாதம் என்கிற பெயரில் மக்களிடையே பிளவு உருவாகிறது. இந்தப் பிளவு, அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அடுத்து ஆட்சியைப் பிடிப்பதற்கும் மிகவும் தேவையாகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in