இலக்கியத்திலிருந்து சினிமா: தேவை சில நெறிமுறைகள்

இலக்கியத்திலிருந்து சினிமா: தேவை சில நெறிமுறைகள்
Updated on
2 min read

உலகள​வில் மாபெரும் வெற்​றியடைந்த பல அற்​புத​மான திரைப்​படங்​கள், உலக இலக்​கி​யங்​களை அடிப்​படை​யாகக் கொண்​ட​வை​தான். சிறந்த நாவல்​களும் நாடகங்​களும் சினிமா வடிவம்​பெறும்​போது, அதன் கதைக்​களத்தை உரு​வாக்க காரண​மாக இருந்த எழுத்​தாளர்​களுக்கு உரிய அங்​கீ​கார​மும் காப்​புரிமைப் பயன்​களும் வழங்​கப்​படு​வதே உலகளா​விய வழக்​க​மாக உள்​ளது.

நமது திரை​யுல​கிலும் ஒரு காலத்​தில் இந்த நற்​பழக்​கம் இருந்​தது; ஆனால், காலப்​போக்​கில் அது கைவிடப்​பட்​டு​விட்​டது. ஒருசில நல்ல இயக்​குநர்​கள் மட்​டுமே இன்​றைக்​கும் இதற்கு விதி​விலக்​காகச் செயல்​படு​வது பாராட்​டுக்​குரியது.

கசப்​பான அனுபவம்: சில ஆண்​டு​களுக்கு முன்​பு, ஓர் இலக்​கியக் கூட்​டத்​தில் நாவல் ஒன்​றைப் பற்​றிப் பேசி​விட்​டுத் திரும்​பிய​போது நடந்த சம்​பவம் நினை​வுக்கு வரு​கிறது. நிகழ்வு முடிந்து நான் பேருந்து நிலை​யத்​துக்கு நடந்து சென்​ற​போது, கூட்​டத்​தில் பங்​கேற்ற ஒரு​வர் என்​னைப் பின்​தொடர்ந்து வந்​தார். அவர் என்​னிடம், “நாவலை மிக​வும் சிறப்​பாக விளக்​கினீர்​கள். அப்​படிப்​பட்ட ஒரு கதையைத்​தான் நான் தேடிக்​கொண்​டிருக்​கிறேன். அந்​தப் புத்​தகம் எங்கு கிடைக்​கும்? சினி​மாவுக்கு இன்​னும் பல நாவல்​கள் தேவைப்​படு​கின்​றன” என்​றார்.

இதைக் கேட்​டதும் எனக்​குள் பெரும் மகிழ்ச்​சி. சினிமா உலகினர் நாவல்​களைத் தேடி வரத் தொடங்​கி​யிருக்​கிறார்​கள்; இதனால் சினி​மா​வும் தரமடை​யும், எழுத்​தாளர்​களுக்​கும் உரிய பொருளா​தார பலன் கிடைக்​கும் என்று நினைத்​துக் கொண்​டேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in