இறையியலின் துருவ நட்சத்திரம்

எந்தவொரு ஐயத்துக்கும் ‘கென்னெட்டைக் கேளுங்கள்’ என்பதுதான் மதராஸ் கிறித்துவ உலகின் வழக்கம்
இறையியலின் துருவ நட்சத்திரம்
Updated on
3 min read

வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான மைக்கேல் மதுசூதன் தத்தாவின் எட்டு ஆண்டு கால மதராஸ் வாழ்க்கை பற்றி ஆராய்ந்தபோது, சார்லஸ் எக்பெர்ட் கென்னெட் என் கவனத்துக்கு வந்தார். எட்டு ஆண்டுகள் (1848-1856) மதராஸ் நகரில் வசித்தவர் மைக்கேல், இங்கு ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களைக் கைவிட்டுவிட்டு 1856 ஜனவரியில் கல்கத்தாவுக்கு அவர் சென்றுவிட்டார். அந்தக் குடும்பத்தின் கதியை ஆராய்ந்தபோது பல தகவல்கள் கிடைத்தன.

பண்டிட் கென்னெட்: மைக்கேலும் கென்னெட்டும் கல்கத்தா பிஷப் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கென்னெட்டின் ஆலோசனையின்பேரில்தான் மதராஸுக்கு வேலை தேடி மைக்கேல் வந்திருக்கிறார். கென்னெட்டின் தந்தை செயலாளராக இருந்த ஆதரவற்றோர் இல்லத்தால் நடத்தப்பட்டுவந்த பள்ளியில் மைக்கேல் ஆசிரியர் ஆனார். அவரது காதலுக்கு எதிர்ப்பு வந்தபோது, கென்னெட்டின் குடும்பம்தான் அவருக்கு ஆதரவாக இருந்தது.

கூடவே, அன்று மதராஸ் நகரில் வெளிவந்துகொண்டிருந்த ‘ஸ்பெக்டேட்டர்’, ‘யூரேஷியன்’, ‘இந்து கிரானிக்கள்’ போன்ற வார இதழ்களில் கவிதைகளையும் குறுங்காவியங்களையும் ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றவராகவும் மைக்கேல் திகழ்ந்தார். இன்றைய மாநிலக் கல்லூரியின் முந்தைய வடிவமான மதராஸ் ஹைஸ்கூலில் ஆசிரியராகவும் 1852 முதல் 1855 வரை பணியாற்றினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in