கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுமா?

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுமா?
Updated on
2 min read

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை கணிசமான அளவில் உயர்ந்திருப்பது, கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனங்கள், பணியாளர்கள் மட்டுமல்லாமல் சொந்த வீட்டுக் கனவைச் சுமந்து நிற்கும் மக்களையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லி, ‘எம்-சாண்ட்’, ‘பி-சாண்ட்’, ஆயத்த கான்கிரீட் கலவை உள்படக் கட்டுமானப் பொருள்களின் விலை 20%க்கும் மேல் உயர்ந்துள்ளதாகக் கட்டுமானத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால் ஒட்டுமொத்தக் கட்டுமானச் செலவும் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, உற்பத்திச் செலவு உயர்வு உள்ளிட்டவை இதற்குக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகக் கட்டுமானத் துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக, 2025இல் வெளியான மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கை தெரிவித்தது. கட்டுமானத் தொழில் துறை வளர்ச்சியின் தேசிய சராசரி விகிதம் 9.4% ஆகவும் தமிழகத்தில் அது 11.56% ஆகவும் இருந்ததாகக் கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in