பிரிக்ஸ் மாநாடும் புது டெல்லிப் பிரகடனமும்

இந்தியாவின் நிலைப்பாட்டைப் பற்றி வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரிக்ஸ் மாநாடும் புது டெல்லிப் பிரகடனமும்
Updated on
3 min read

செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு (BRICS Summit) இந்தியா தலைமை வகித்தது. இதற்கு முன்பும் இந்தியா மூன்று முறை தலைமை வகித்திருக்கிறது (2012, 2016, 2021). அப்போது, அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

2006இல் நிறுவப்பட்ட பிரிக்ஸில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள்தாம் வெகுகாலத்துக்கு அங்கம் வகித்துவந்தன.

இந்த ஐந்து நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் முதலெழுத்தின் சேர்க்கைதான் BRICS என்றானது. 2024இல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய ஆறு நாடுகள் இணைந்தன. உறுப்பினர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது.

முக்கியத்துவம்

இப்போது உலகின் சரிபாதி மக்கள், பிரிக்ஸ் நாடுகளில் வசிக்கிறார்கள். உலகப் பொருளாதாரத்தின் ஐந்தில் இரண்டு பங்குக்கும், உலக வணிகத்தில் கால் பங்குக்கும், பிரிக்ஸ் நாடுகள் பங்களிக்கின்றன. டெல்லி மாநாட்டில், உறுப்பு நாடுகளைத் தவிர ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பதின்மர் விருந்தினராகப் பங்கேற்றனர்.

பிரிக்ஸின் முக்கியத்துவத்துக்கு இந்த எண்ணிக்கை மட்டும் காரணம் இல்லை. ஜி-7 நாடுகள், நேட்டோ நாடுகள், மேற்கு நாடுகள் அல்லாத ஒரு கூட்டமைப்புதான் பிரிக்ஸ். உலகின் தென்கோள (global south) நாடுகளின் முகமாக அது உருவெடுத்து வருவதும் அதனால்தான். இந்த மாநாடு இரண்டு அம்சங்களில் கவனம் பெறுகிறது.

ஒன்று, உள்முரண்கள் மிக்க உறுப்பு நாடுகள் சில (இந்தியா-சீனா, ஈரான்-அமீரகம், எகிப்து-எத்தியோப்பியா) அருகருகே அமர்ந்து தங்கள் சிக்கல்களைப் பேசுவதற்கு மாநாடு களம் அமைத்துக் கொடுத்தது.

இரண்டு, இந்த முரண்களைத் தாண்டி மாநாட்டின் இறுதியில் உறுப்பு நாடுகளால் ஒருமனதாகத் தீர்மானங்களை நிறைவேற்ற முடிந்தது. இந்தத் தீர்மானம் ‘புது டெல்லிப் பிரகடனம்’ (New Delhi Declaration) என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பிரகடனம் 140 பத்திகளுக்கு நீண்டது. போர், பயங்கரவாதம், உடல்நலம், கல்வி, வேளாண்மை, செயற்கை நுண்ணறிவு, வணிகம், பண்பாடு முதலான பல்வேறு கூறுகளைப் பேசுகிறது. அரசியல்ரீதியாக இதில் மூன்று அம்சங்கள் கவனத்துக்கு உரியவை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in