‘இருமலர்கள் ஒரு மணம்’ முதல் ‘மெய்க்கோடு வரையும் மண்புழு’ வரை | நூல் வரிசை

‘இருமலர்கள் ஒரு மணம்’ முதல் ‘மெய்க்கோடு வரையும் மண்புழு’ வரை | நூல் வரிசை
Updated on: 
1 min read

இருமலர்கள் ஒரு மணம்

வீரகனூர் ஆ.இரவிச்சந்திரன்

கவித்தேடல் பதிப்பகம்

விலை: ரூ.200

தொடர்புக்கு: 9445742500

காதல் கைகூடாத நிலையிலும் கிடைத்த வாழ்க்கையைக் கொண்டாடும் நல்ல மனிதர்களின் கதை நாவலாக உருப்பெற்றுள்ளது. கிராமப் பின்னணியும் வட்டார வழக்குகளும் நாவலின் பலம்.

வாசிப்பின் வாசல்கள்

க.வானமாமலை

தமிழின் அமுதம் பதிப்பகம்

விலை: ரூ.300

தமிழ், மலையாளம், கன்னடம் எனத் தான் படித்த நூல்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரை, விமர்சனங்கள் என எழுதியவற்றைத் தொகுத்து நூலாக அளித்துள்ளார் இந்நூலாசிரியர்.

சிதைக்கப்பட்ட பழமொழிகள்

கே.பாலகங்காரதன்

டிகே பப்ளிஷர்ஸ்

விலை: ரூ.250

தொடர்புக்கு: 9940664635

பழமொழிகள் தவறான பொருளில் வழங்கப்படுவதற்கு மாற்றாக புதிய பொருள்கள் கூறி விளக்குகிறார் நூலாசிரியர். பழமொழிகள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in